காருக்குள்ளே கலக்கல் டான்ஸ்!

ப்போதெல்லாம் இணையத்தில் பிரபலமாக ஒரு பாடல் போதுமானதாய் இருக்கிறது. கடந்த வாரம் ‘தமிழ் மைம் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் ‘நான் ஆணையிட்டால்’ பாடலில் தொடங்கி ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா’ பாடல் வரை நடனமாடிய வீடியோ வைரல் ஆனது. இந்தப் பாடல்களை காரில் அமர்ந்தபடியே பாடினார்கள் என்பது இன்னும் ஸ்பெஷல். வீடியோவில் வரும் தக்‌ஷிகா ஸ்ரீ தரன், குழுத் தலைவர் ப்ரிந்தன் பாலாவிடம் பேசியதில் இருந்து...

‘‘வீடியோக்கள் எல்லாம் அசத்துறீங்களே. உங்க டீம்ல மொத்தம் எத்தனை பேர்?’’

‘‘கனடாவில் இருக்கும் இசைக் கலைஞர்கள், நடிகர்கள், நடனக் கலைஞர்கள் எனப் பலர் எங்கள் குழுவான யாஷ்ட்ராவில் இருக்கிறார்கள். டொரொண்டோவில் இருக்கும் தமிழர்களான நாங்கள், எங்கள் திறமையை சமூக வலைதளங்கள் மூலம் வெளிப்படுத்திவருகிறோம். கனடாவில் இருக்கும் திறமையான தமிழர்கள் எல்லோருக்கும் எங்கள் குழுவில் இடமுண்டு. தற்போதைக்கு எங்கள் குழுவின் ஐடியாக்களை மட்டும் வைத்து நிகழ்ச்சிகளை உருவாக்க இருக்கிறோம்.’’

‘‘கனடாவின் சாலைகள்ல ஜாலியா வீடியோஸ் எடுக்கிறீங்களே?’’

‘‘இங்கே குளிர் மட்டும்தான் பாஸ் பெரிய பிரச்னை. கனடாவுல ஷூட்டிங் பண்றதுக்கு நிறைய இடங்கள் இருக்கு. ஆனால், எங்கே இருந்தாலும் சீக்கிரம் ஷூட் பண்ணிட்டுக் கிளம்பிடணும். இல்லாட்டி பிரச்னைதான். ‘அரண்மனை -2’ ல வர்ற ‘குச்சி மிட்டாய்’ பாட்டு, ‘நானும் ரெளடிதான்’ல வர்ற ‘தங்கமே’ பாட்டுனு நாங்க ஷூட் பண்ணின எல்லாமே ஜாலியா எடுக்கிறதுதான்.’’

‘‘தமிழ் சினிமா பாடல்கள் வீடியோ பற்றி...?’’

‘‘நான் கல்லூரியில லைஃப் சைன்ஸ் படிச்சுட்டு இருக்கேன். என் தம்பி சாய்கவின் தரன் ஏழாவது படிக்கிறார். ஆஸ்திரேலியப் பெண்கள் சிலர் இணைந்து ஸ்கெட்ச்ஷீ என்கிற பெயரில் யூ டியூபில் வீடியோக்கள் போட்டு அசத்திக்கொண்டு இருந்தனர். தமிழில் அதேபோல் செய்யலாமே என ஆரம்பித்ததுதான் தமிழ் மைம் எக்ஸ்பிரஸ். தமிழ் சினிமாவுல வந்திருக்கும் பாடல்களை வைத்து ஒரு வீடியோ பண்ணலாம்னு யோசிச்சேன். வித்தியாசமா இருக்கட்டுமேன்னு காருக்குள்ள உட்கார்ந்துகிட்டே நடனம் ஆடுற மாதிரி ப்ளான் பண்ணினோம். நான், என் தம்பி சாய்கவின், தோழி கவி தவநேசன் எல்லோரும் ஒரு வாரம் இதுக்காக பிராக்டீஸ் பண்ணினோம். ஒவ்வொரு பாட்டுக்கும், ஓவ்வொரு டிரெஸ்னு நிறைய செலவு பண்ணினோம். எங்க குடும்பம்தான் எல்லா செலவும் பண்ணினாங்க. பாடல் இப்போ ஃபேஸ்புக்ல  3 லட்சம் வியூஸ் பெற்று இருக்கு. தமிழ் ரசிகர்கள் இத்தனை பேர் எங்க வீடியோ பார்ப்பாங்கனு நிஜமாவே நாங்க நினைக்கல. இனி காலேஜ் போயிட்டு வந்து சும்மா இருக்கிற நேரத்துல இது மாதிரி நிறைய வீடியோஸ் பண்ணணும்” என்கிறார் தக்‌ஷிகா.

யூட்யூப் லிங்க்: https://www.youtube.com/watch?v=Voi7u6WQSo4

- கார்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick