சினிமால்!

மிழ் சினிமாவில் இப்போதெல்லாம் தல, தளபதி ரெஃபரென்ஸ் இல்லாமல் படம் வருவதே அரிதாகிவிட்டது. ஒரு புறம் ‘தலயும் வாத்யாரும்’னு படம் வந்தால், இன்னொரு புறம் விஜய்யைப் புகழ்ந்து ‘4 ரசிகர்கள்’னு படம் வருது. இந்த நிலையில் விஜய், அஜித் ரசிகர்கள் இணைந்து ஒரு நல்ல காரியத்துக்காகப் போராடுகிறார்கள் என்ற ஓர் உயர்ந்த நோக்கம்(!) கொண்ட கதைக்கருவோடு ஒரு படம் இயக்கி வருகிறார் ‘வெண்ணிலா வீடு’ படத்தை இயக்கிய வெற்றி மகாலிங்கம். படத்தோட பேரு ‘விசிறி’யாம். என்ன நல்ல காரியமா இருக்கும்?

காத்ரினாவைக் காதலித்து வந்த ரன்பீர் கபூரும், ஹ்ரித்திக் ரோஷனைக் காதலித்து வந்த கங்கணாவும்தான் இப்போதைய ஹாட் பாலிவுட் காதல் ஜோடியாம். இருவரையும் அடிக்கடி மும்பை ஹோட்டல்களிலும், பார்ட்டிகளிலும் பார்க்க முடிகிறதாம். இது காதல்தானா? என கேட்டால் இருவரிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. ஆனால், அது காதல்தான் என்று அடித்துச் சொல்கிறார்கள் நெருக்கமானவர்கள். நிஜம்தானா?

அனுஷ்கா, தமன்னா, பிரபாஸ், ராணா நடிப்பில் உருவான ‘பாகுபலி’யின் கிளைமாக்ஸ் காட்சியை மட்டுமே 15 கோடி செலவில் 100 நாட்கள் எடுத்தார் இயக்குநர் ராஜமௌலி. பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததால், இரண்டாம் பாகத்தின் க்ளைமாக்ஸ் போர்க்காட்சிகளை அதைவிட பிரமாண்டமாய், 30 கோடி செலவில் 100 நாட்கள் எடுக்கிறாராம். இதில் ஹீரோக்களுக்கு இணையாகத் தமன்னாவுக்கும் முக்கிய பங்கு இருப்பதால் வாள் பயிற்சி, குதிரையேற்றம் எனப் பயிற்சி எடுத்திருக்கிறார். முதல் பாகத்தை விட மிரட்டலான, பிரமாண்டமான போர் சண்டைக்காட்சியாக உருவாகி வருகிறதாம். எல்லாமே மிரட்டல்தான்! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்