“அவரை ஹீரோவாக்கினேன். அவர் என்னை இயக்குநராக்கினார்!”

கேரக்டர் ரோல்களில் நடித்தாலும், கவனிக்கும்படியான படங்களில் தலைகாட்டுகிறார் உதயபானு மகேஸ்வரன். நட்ராஜ் நடிப்பில் ‘நாளை’, ‘சக்கரவியூகம்’ என இரண்டு திரைப்படங்களையும் இயக்கியிருக்கிறார். ரஜினிகாந்தின் ‘கபாலி’ படத்தில் நடித்தது இவருடைய ‘ஹைலைட்’ கிராஃப்! அவரிடம் பேசினேன்.

‘‘இயக்குநராதான் சினிமாவுக்கு வந்தேன். ‘நாளை’, ‘சக்கரவியூகம்’ படத்துக்குப் பிறகு, கே.பாலச்சந்தரின் ‘கவிதாலயா’ நிறுவனத்துக்கு ஒரு படம் பண்ணலாம்னு இருந்தேன். ஆனா, வெச்சிருந்த இன்னொரு கதை ரொம்ப நல்லா இருக்குனு சொல்லி, ‘சாந்தி நிலையம்’ங்கிற சீரியலை இயக்கினார் பாலச்சந்தர் சார். என் கதையை அவர் இயக்குற சந்தோஷம் ஒருபக்கம், அவர்கிட்டவே வேலை பார்க்கப்போற சந்தோஷம் இன்னொரு பக்கம். உடனே சரினு சொல்லிட்டேன். ஆக்சுவலா, அந்த சீரியல் முடிஞ்சதும் படம் பண்றதாதான் இருந்தேன். திடீர்னு ஒருநாள் ‘மூடர்கூடம்’ நவீன் அந்தப் படத்தோட கதையைச் சொல்லி, ‘நீங்க நடிச்சா சூப்பரா இருக்கும்’னு கேட்டார். நடிப்புல பெருசா விருப்பம் இல்லை. ஆனா, நடிப்புதான் இன்னைக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுது. பிறகு, ‘பொறியாளன்’, ‘எனக்குள் ஒருவன்’, ‘144’, ‘இது நம்ம ஆளு’, ‘கபாலி’னு பல படங்களில் நடிச்சுட்டேன்’’ நடிகரான கதையோடு ஆரம்பித்தார் உதயபானு மகேஸ்வரன்.

‘‘இயக்கிய ரெண்டு படத்துக்கும் நட்டி ஹீரோ. எப்படி?”

‘‘நானும் அவரும் 25 வருட நண்பர்கள். ஆக்சுவலா, நான் சினிமாவுக்கு வந்ததே நட்டியாலதான். சென்னைதான் எனக்கு சொந்த ஊரு. கெமிக்கல் இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, அது சம்பந்தமா பிஸினஸ் பார்த்துக்கிட்டு இருந்தேன். பெருசா லாபம் இல்லை. அப்போதான், நட்டியோட அறிமுகம் கிடைச்சுது. அப்போ அவர் உதவி ஒளிப்பதிவாளாரா இருந்தார். அவர்கிட்ட பல கதைகளைப் பேசுவேன். படம் பண்ணணும்னு ஆசை இருக்கிறதையும் சொன்னேன். டெல்லி, மும்பைனு போற இடமெல்லாம் என்னையும் கூட்டிக்கிட்டு போய் சான்ஸ் வாங்கிக் கொடுத்தார். பி.ஆர்.பந்துலு சாரோட பொண்ணு, ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் பி.ஆர்.விஜயலட்சுமி மேடம்கிட்ட வேலை பார்த்தேன். ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் சாரோட அண்ணன் சங்கீத் சிவன் சார்கிட்ட வேலை பார்த்தேன். ‘விக்கி டோனர்’, ‘மெட்ராஸ் கஃபே’, ‘பிகு’ போன்ற பாலிவுட்டின் ஹிட் படங்களை இயக்கிய சூஜித் சிர்காரோட முதல் படத்துக்கு நானும், நண்பர் ஒருத்தரும் சேர்ந்துதான் கதை எழுதினோம். தமிழ்ல வின்சென்ட் செல்வாகிட்ட வேலை பார்த்தேன். இப்படி சினிமாவுல ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு வந்ததுக்கு அப்புறம்தான், படம் பண்ற தைரியம் வந்தது. நட்டிதான் நடிக்கணும்னு அடம்பிடிக்க, அவரை நடிகர் ஆக்கினோம். ‘நாளை’, ‘சக்கரவியூகம்’ ரெண்டுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சுது. எல்லாத்துக்கும் காரணம் நட்டிதான். அவர் என்னை இயக்குநர் ஆக்கினார். நான் அவரை ஹீரோ ஆக்கினேன்!’’

‘‘நடிகராவே தொடருவோம்னு முடிவு பண்ணிட்டீங்களா?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்