“ ‘டர்ட்டி பிக்சர்’ மாதிரி என்றால் ஓகே!”

‘ஒருநாள் கூத்து’ படத்தின் இன்னொரு நாயகி நிவேதா பெத்துராஜ். துபாய் வரவு. மிஸ் இந்தியா யுஏஇ. தமிழுக்கு நல்வரவு... அப்புறம் என்ன, அழகியுடன் ஒரு சின்ன சிட் சாட்.

‘‘மை நேம்... வாட் டு டெல் யூ?’’ என ஆரம்பித்தவுடன்

‘‘ஹல்லோ. எனக்கு நல்லாத் தமிழ் தெரியும். மதுரை பழங்காநத்தம் பொண்ணு. நீங்கள் தமிழ்லேயே பேசலாம்’’ என்று பல்ப் கொடுத்தார்.

‘‘அதென்ன மிஸ் இந்தியா யு.ஏ.இ?’’

“துபாய் வாழ் இந்தியர்களுக்கு இடையில நடக்கிற அழகிப் போட்டி. இதுவும் மிஸ் இந்தியா மாதிரி அழகு, பொது அறிவு, நம்மை நாம் எப்படி வெளிப்படுத்துறோம், இப்படி பலகட்டத் தேர்வுகள் இருக்கு. அந்த டைட்டில் எனக்குக் கிடைச்சது சந்தோஷம்.”

‘‘ ‘ஒரு நாள் கூத்து’ பட வாய்ப்புப் பற்றிச் சொல்லுங்க?’’

“என்னோட காஸ்ட்யூம் டிசைனர் எனக்கு நல்ல ஃப்ரெண்ட். அவங்கதான் ஆடிஷன் வரியானு கேட்டாங்க. நானும் ஆடிஷன் பண்ணேன். ரெண்டு நாள்ல இயக்குனர் நெல்சன் போன் பண்ணினார்”

‘‘ ‘ஒரு நாள் கூத்து’ உங்க கேரக்டர் உங்களுக்குப் பிடிச்சுதா? ஏத்துக்கறீங்களா?’’

‘‘நிச்சயமா.. ஒரு மாப்பிள்ளை வேணாம்னு சொல்லிட்டா அடுத்து லவ் பண்ற பையனைக் காத்திருக்க வைக்கிறது தேவையில்லைனு நினைக்கிறேன்.”

‘‘மதுரைக்கு இப்பவும் போறதுண்டா?’’

“கண்டிப்பா. வருஷாவருஷம் போயிடுவேன். பிறந்து வளர்ந்த ஊராச்சே. பத்து வயசுலதான் குடும்பத்தோட துபாய்ல செட்டில் ஆனோம்.”

‘‘அடுத்தடுத்த கேரக்டர்கள், படங்கள் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?’’

“எனக்கு இப்படித்தான் படம் வேணும், இந்த கேரக்டர்கள்தான் பண்ணுவேன்னு சொல்ல மாட்டேன். என்னோட கேரக்டர் பார்த்துட்டு தானாவே நல்ல வாய்ப்புகள் வரும்னு நம்புறேன். அந்த அளவுக்கு எனக்கு ‘ஒருநாள் கூத்து’ல நல்ல கேரக்டர்.”

‘‘நடிகையா இருந்தாலே பிடிச்சதை சாப்பிட முடியாது, இதுல மிஸ் இந்தியா யூஏஇ வேற... உங்க டயட் சீக்ரெட் சொல்லுங்களேன்?’’

“நான் 70 சதவிகிதம் டயட் ஃபாலோ பண்ணுவேன். 30 சதவிகிதம் நல்லா சாப்பிடுவேன்.”

‘‘துபாய் கல்யாணங்கள் எப்படி நடக்கும்?’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்