“இளையராஜா எங்களுக்கு இசைக்கடவுள்!”

ண்ணனும் தம்பியும் சேர்ந்து ஒரு சினிமாவுக்குப் போனாலே அதிசயம். ஆனால், மராத்தி சினிமாவில் அண்ணனும் தம்பியும் சேர்ந்து தங்கள் இசையால் பித்துக்கொள்ள வைக்கிறார்கள். அஜய்-அதுல் சகோதரர்கள்தான் அவர்கள்!

2008-ல் ‘ஜோக்வா’ என்ற படத்துக்காக தேசிய விருது வாங்கியவர்கள். இன்னும் சொன்னால் ‘ஃபான்டரி’, ‘சாய்ரத்’ போன்ற படங்களின் மூலம் அகில இந்தியக் கவனம் ஈர்த்த இசையமைப்பாளர்கள். ஹாலிவுட்டில் இருக்கும் சோனி ஸ்கோரிங் ஸ்டுடியோஸில் (சாய்ரத் படத்தின்) இசைக்கோர்ப்பு மற்றும் பதிவினை செய்த முதல் இந்திய இசையமைப்பாளர்கள் இவர்கள்தான். 42 வயதாகும் அஜய்யைவிட அதுல் இரண்டு வயது சிறியவர். வட மகாராஷ்டிராவில் கிராமம் கிராமமாகக் குடிபெயர்ந்த நாடோடி வாழ்க்கை இவர்களுடையது. சின்னவயதில் தோல் கருவிகளின் மீது நாட்டம்கொண்ட இவர்களுக்குப் படிப்பு ஏறவில்லை. பெற்றோர்கள் இவர்களது இசை ஆர்வத்தைத் தெரிந்துகொண்டு ஹார்மோனியம், மிருதங்கம், டோலக் வாசிக்க மாஸ்டர்களிடம் அனுப்பி இருக்கிறார்கள். இவர்களின் பிறந்தநாளுக்கு இவரது தந்தை வாங்கித் தந்த கீ போர்டுகள் மூலம் வாழ்க்கையே மாறிப்போனது. அதைப் பிரித்து மேய்ந்து இசை ஆர்வத்தாலேயே எளிதாகக் கையாள ஆரம்பித்தார்கள். உள்ளூர் மியூஸிக் ட்ரூப்புகளில் கீ போர்டு வாசித்து வந்த இவர்களை மும்பைக்கு பெற்றோர் அனுப்பிவைத்துக் காத்திருந்தனர். விளம்பரங்களுக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கிடைத்ததும் அப்படியே பிடித்துக்கொண்டார்கள். இவர்கள் வெளியிட்ட ‘விஸ்வநாயகா’ என்ற மியூஸிகல் ஆல்பம் நல்ல பேரை வாங்கித்தர முதன்முதலாக 2004-ல் ‘காயப்’ (தமிழில் ரீமேக் செய்யப்பட்ட ஜித்தன் படத்தின் ஒரிஜினல்) என்ற ராம்கோபால் வர்மாவின் தயாரிப்பில் வெளியான படத்துக்கு இசை அமைத்தார்கள்.  மராத்தி படங்களுக்கும் அவ்வப்போது இந்திப்படங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தும் பெரிய ஹிட் எதுவும் இல்லாமல் தவித்தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்