சன்னி பற்றி உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா?

ன்னி லியோன் பற்றி நம்ம எல்லோருக்குமே தெரியும். நமக்குத் தெரியாத, தெரிஞ்சுக்க வேண்டிய சில சன்னி லியோன் டிட்-பிட்ஸ்...

கரண்ஜித் கௌர் வோரா- இதான் சன்னி பேபியின் ஒரிஜினல் பெயர். 2001-ல் ஆண்களுக்கான அடல்ட்ஸ் ஒன்லி புத்தகம் ‘பெந்தெஹவுஸ்’ அட்டைப்படத்திற்காக பெயரை மாற்றிக்கொண்டார். சன்னி போல வருமா?

நர்ஸுக்குப் படித்தவர், 19 வயதில் போர்னோ உலகிற்கு வந்தார். நைஸ் நைன்டீன்!

ஜெர்மன் பேக்கரியில் முதலில் வேலை பார்த்திருக்கிறார். ஒரு கேக், கேக் ஷாப்பில் வேலை பார்த்த மொமன்ட்!

18 வயதிலேயே இரு பாலின ஈர்ப்புள்ளவர் என்பதைத் தெரிந்துகொண்டாராம். நல்லது!

பாலிவுட் சினிமாவுக்கு வந்த முதல் அடல்ட்ஸ் போர்ன் ஸ்டார் சன்னிதான். கெத்துடா!

‘நான் போர்ன் நடிகை ஆகப்போகிறேன்’ எனப் பெற்றோர்களிடம் சொல்லி சம்மதம் வாங்கி நடிக்க வந்தவர் இவர். அதனால் ஆரம்பத்தில் பெண்களுடன் மட்டுமே நெருக்கமாக நடித்தார். நெருப்புடி!

கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சிகள் என்றால் செம அலர்ஜியாம். தெரிஞ்சுக்கோங்க!

கைகளால் கம்பளிப்போர்வை நெய்வதில் கில்லி. தன் தோழிகள் கர்ப்பமானால், தன் கையால் அழகான சால்வை பரிசளிப்பார். செம சன்னி!

கிவி பழமும் ஃபாஸ்ட் ஃபுட் ஐட்டங்களும் ரொம்பப் பிடிக்கும். எனர்ஜி ரகசியம்?

அப்பா, அம்மா இறந்த பிறகு தற்போது தம்பி சந்தீப் வோராதான் சன்னியின் பெஸ்ட் ஃப்ரெண்ட், கேர் டேக்கர். ‘அக்கா போர்ன் நடிகை என்று சொல்வதில் அவமானமாக உணர்ந்ததில்லை. இப்போது முழு நேர பாலிவுட் நடிகை ஆனதில் மிக்க மகிழ்ச்சி’ என்கிறார் சந்தீப் வோரா. தம்பியுடையாள்!

‘வடகறி’ படத்தில் ஜெய்யோடு பட்டும் படாமல் குத்து டான்ஸ் ஆடியதுதான் தமிழ் சினிமா என்ட்ரி. போங்கு பாஸ்!

ப்ளே பாய் இதழின் ஓனர்களில் ஒருவரான மேட் எரிக்‌ஷனுடன் காதல் ஆகி 2008 வரை ஜோடியாய் இருந்தார்கள். ஆனால், பிரேக்-அப் ஆகி சில நாட்கள் ஸ்டாண்ட்-அப் காமெடியன் ரஸ்ஸல் பீட்டர்ஸுடன் லவ்வில் இருந்தார். 2011-ல் டேனியர் வெபரைப் பார்த்துக் காதலாகி கல்யாணத்தில் முடிந்து இப்போ செம ஹேப்பி சன்னி. டேனியலும் போர்னோ நடிகர்தான். ஆஹா!

ஓர் அழகான பெண் குழந்தைக்கு அம்மா ஆவது சன்னியின் லட்சியங்களுள் ஒன்று. விரைவில் நல்ல செய்தி எதிர்பார்க்கலாம். அம்மா!

நாய்கள் மீது பிரியம் உள்ளவர். த்ரிஷா ஸ்டைலில் இரண்டு தெரு நாய்களை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். கொடுத்து வெச்ச நாய்கள்!

அமீர் கானின் கொலவெறி ரசிகை. ஒரு படத்திலாவது அமீர்கானுடன் நடித்துவிட வேண்டும் என்பது ஆசை. அமீரும் ஓகே சொல்லி இருக்கிறார். சொல்லாம...!

-ஆர்.சரண்

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick