ஆஃப் த ரெக்கார்டு!

பைசா நடிகை  அடிப்படையிலேயே பணக்காரராம். அவருக்கு சொந்தமாக பல எஸ்டேட்டுகள் இருக்கின்றனவாம். பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் கொல்லிமலையில் உள்ள தன் எஸ்டேட்டில் ஓய்வெடுத்து வருகிறாராம். எஸ்டேட்டில் ஒரு கோழிப் பண்ணையையும் ஆரம்பித்து கவனித்து வருகிறாராம்!

இசை நடிகர் கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதால், தான் இசையமைக்கும் மற்ற இயக்குநர்களின் படங்களுக்கு தரமான இசையைக் கொடுப்பதில்லையாம். இதனால் அவரை ஆஸ்தான இசையமைப்பாளராக வைத்திருந்தவர்கள் எல்லோரும் ஆளுக்கொரு பக்கமாகப் போய்விட்டார்களாம்!

கொழுக் மொழுக் நடிகைக்கும், அவரது டாக்டர் அம்மாவுக்கும் இடையில் பண விஷயத்தில் உரசலாம். இதனால் இதுநாள் வரை தன் கால்ஷீட் மற்றும் பண விவகாரங்களைக் கவனித்து வந்த அம்மாவை நீக்கிவிட்டு புதிதாக ஒரு மேனேஜரை நியமித்து விட்டாராம்!

இனிப்புக் கடை நடிகை கதை சொல்லவரும் இயக்குநர்களிடம் ‘நம்பர் நடிகை நடிக்கும் படங்களைப் போல, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள அல்லது நாயகியை மையப்படுத்திய கதையாக இருந்தால் உடனே கால்ஷீட் தருகிறேன்’ என்கிறாராம்!

பல படங்கள் தயாரித்து வந்த செல்லம் நடிகர் கடந்த சில ஆண்டுகளாக தயாரித்த படங்கள் எல்லாமே மண்ணைக் கவ்வியதால் நடிகருக்கு பெரிய நஷ்டமாம். இதனை ஈடுகட்ட தயாரிப்பை நிறுத்திவிட்டு, முழு நேரமும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறாராம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்