இளங்கோவன் திருந்தணும்!

காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் எனத் தேர்தல் தோல்விக்குப் பிறகும், பரபரப்பு மோடில் இருக்கிறார், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன். அவரைச் சந்தித்துப் பேசினேன்.

‘‘கன்டெய்னர் லாரியில் பிடிபட்ட 570 கோடி ரூபாய் பணம் தொடர்பான மர்மம், பலவித யூகங்களுக்கு இடம் கொடுத்திருக்கிறதே?”

‘‘இந்த விஷயத்துல மத்திய அரசு விளக்கம் கொடுக்க எதுவுமில்லை. கலைஞர் அவர்களும், இளங்கோவனும் ‘மத்திய அரசு விளக்கம் கொடுக்கணும்’ங்கிற தோற்றத்தை உண்டு பண்ணிட்டாங்க. பணம் கொடுத்து அதிகாரத்தைக் கைப்பற்றுகிற நிலை இங்கே இருக்கும்போது, அவ்வளவு பணம் எங்ககிட்ட இருந்திருந்தா, நாங்க ஏன் தோற்கப்போறோம்? நேர்மையான ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் எங்கள் கட்சிமீது வேண்டுமென்றே பழி சுமத்தும் திட்டம் இது. பணத்துக்கு ஒரு வங்கி உரிமை கோரியிருக்கு, விளக்கம் கொடுத்திருக்கு. ஆனா, ‘இது பா.ஜ.க-வுக்கு கொடுக்கப்பட்ட 30 சதவிகித கமிஷன்’னு பொய் பிரசாரம் பண்றாங்க. கமிஷன் வாங்குற முறையெல்லாம் கலைஞருக்கும், இளங்கோவனுக்கும்தான் தெரியும். ‘2ஜி’யில் கமிஷன் வாங்கத்  தெரியும். ஆகாயம், காற்று, பாதாளத்துலகூட கமிஷன் வாங்கத் தெரியும். தவிர, கன்டெய்னர் லாரிக்குள்ள கமிஷன் வாங்குற மோசமான கட்சி நாங்க இல்லை. பாம்பின் கால் பாம்பறியும்னு சொல்வாங்க. அதுமாதிரி, ‘ச்சே.. இப்படி ஒரு சூழல்ல நாங்க ஆட்சியில இருந்திருந்தா இவ்வளவு கமிஷன் வாங்கியிருக்கலாமே?’னு  கலைஞர் கணக்குப் போடுறார். அவரோட கருத்துகளும் ‘கமிஷனை விட்டுட்டோமே?’ங்கிற ரீதியிலதான் இருக்கு. சின்ன உதாரணம் சொல்றேன். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நடந்த நிலக்கரி ஊழலால் 1 லட்சத்து 80,000 கோடி நஷ்டம் ஆகியிருக்குனு ஆய்வுகள் சொல்லியிருக்கு. சுப்ரீம் கோர்ட்டும் அதுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிருக்கு. அவங்க நிலைமை இப்படி இருக்கும்போது, இந்த மாதிரி பொய்களை எடுத்துவிடலாமா? கலைஞர் அவர்களுக்கும், சகோதரர் இளங்கோவன் அவர்களுக்கும் அரசியல் பண்ண வேற சப்ஜெக்ட் கிடைக்கலை.’’

‘‘வழக்கம்போல, ‘உள்ளாட்சித் தேர்தலில் பெரிய வெற்றி பெறுவோம்’னு சொல்றீங்க. அதுக்கான வியூகம் என்ன வெச்சிருக்கீங்க?”

‘‘இருக்கு. ‘பஞ்சாயத்து முதல் பார்லிமென்ட் வரை’ - எந்தத் தேர்தலாக இருந்தாலும் இதுதான் எங்க கட்சியோட தாரக மந்திரம். மற்ற மாநிலங்கள் மாதிரி இல்லாம, தமிழ்நாடு கொஞ்சம் மாறுபட்ட மாநிலமா இருக்கு. ‘நல்லாட்சி’ பலத்தை மட்டுமே வெச்சு இங்கே தேர்தலை எதிர்கொள்ள முடியலைங்கிறது உண்மை. ஆனா, உள்ளாட்சித் தேர்தல் மக்களுக்குச் சேவை செய்றதுக்கான களம். ஆக்சுவலா, இதுல அரசியலே புகக்கூடாதுனுதான் முன்னோர்கள் சொல்லி வெச்சிருக்காங்க. துரதிஷ்டவசமா, கல்லூரித் தேர்தல்கள்ல அரசியல் புகுந்த மாதிரி, உள்ளாட்சியிலும் புகுந்துடுச்சு. அதை எதிர்கொள்ளத் தயாரா இருக்கோம். இப்போதைக்கு சென்னையில இருக்கிற 200 வார்டுகளுக்கும் குறிவெச்சு சூப்பரான பிளான் போட்டிருக்கோம். அதைத் தேர்தல் நடக்கும்போது தெரிஞ்சுக்குவீங்க.”

‘‘தமிழ்நாட்டுல தொடர்ந்து தோல்வியைச் சந்திக்கிறீங்க. உங்க கட்சியோட பலவீனம் என்னன்னு கண்டுபிடிச்சீங்களா?”

‘‘அடிப்படைக் கட்டமைப்புதான் கொஞ்சம் பலவீனமா இருக்கு. திராவிடக் கட்சிகள் பூத்துக்குப் பத்துப் பேரைப் பொறுப்பாளர்களா போட்டா, எங்க கட்சியில் யாருமே இருக்க மாட்டாங்க. அந்த நிலையைக் கொஞ்சம் மாற்றி, இப்போ பூத்துக்கு ஆறு பொறுப்பாளர்களைத் திரட்டுற அளவுக்கு வளர்ந்திருக்கோம். ஆனா, தேசியக் கட்சிகளோடு ஒப்பிடும்போது நாங்க கொஞ்சம் வளர்ந்திருக்கோம். இந்த சட்டமன்றத் தேர்தல்ல எங்களோட வாக்குகளைத் தக்கவெச்சதோட, ஏறத்தாழ ஒரு சதவிகித வாக்குகள் அதிகமா வாங்கியிருக்கோம். திராவிடக் கட்சிகளின் கோட்டையாக இருந்த சென்னையில், எங்களுக்குக் கணிசமான வாக்குகள் உயர்ந்திருக்கு. மக்கள் எங்களை ஏத்துக்க ஆரம்பிச்சுட்டாங்க. இந்தத் தேர்தல்ல பணம் விளையாடாத வார்டுகளைக் குறிவெச்சு ஜெயிப்போம்.’’

‘‘உங்க கட்சிக்கு மிஸ்டுகால் கொடுத்துச் சேர்ந்தவங்க, உங்களுக்கு ஓட்டுப் போடலையோ?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்