கதை விடுறாங்க!

‘தன் மனைவியிடம் தனபால் ஏதோ கேட்க, அவள் கையில் பூரிக்கட்டையோடு ஓடிவந்தாள்...’

- இந்த வரியை நம் ஃபேஸ்புக் பக்கத்தில் கொடுத்து சுவாரஸ்யமான கதையாக உருவாக்கச் சொல்லியிருந்தோம். வாசகர்கள் உருவாக்கிய கதைகள் இதோ...!

ராஜ்குமார்: ஓடி வந்தவள் கணவனிடம் பூரிக்கட்டையை நீட்டி “இந்தாங்க பூரிக்கட்டை, போயி மாவு உருட்டி பூரி போடுங்க. ஒரு நாடகத்தைக்கூட முழுசா பார்க்கவிடாம பூரிக்கட்டை எங்கே இருக்குனு உசுர வாங்குறீங்க’’ என்றபடி பூரிக்கட்டையால் கணவனின் மண்டையில் நங்கென்று போட்டாள்.

தமிழ்: தனபால் ‘கபாலி’ இசையில் லயித்து ‘நெருப்புடா நெருப்புடா’ என்று கத்திக்கொண்டிருக்க, அதைத் தவறாகப் புரிந்துகொண்டு அலறியடித்து ஓடிவந்தவள் விஷயமறிந்து அந்தக் கட்டையாலேயே தனபால் கபாலத்தில் ஒன்று கொடுத்துவிட்டுச் சென்றாள்.

சுராஜ்: அப்போது தனபால் “நீ போடும் பூரியே கட்டை மாதிரிதான் இருக்கும்” எனக் கூற அதன் பின் நடந்தது உலகம் அறிந்தது.

ஜெகன்:  ‘‘ஏய், பூரி சூப்பர்’’ என்று தனபால் சொல்ல, அவனை அந்தக் கட்டையால் செல்லமாகத் தட்டிவிட்டுச் சென்றாள்.

பிரகாஷ்: தன் மனைவியிடம் ‘இந்த வார ‘டைம்பாஸ்’ வாங்க மறந்துட்டேன்’ என்று சொன்னவுடன் பூரிக்கட்டையோடு அடிப்பதற்கு ஓடி வந்தாள். உடனே தனபால் ‘இதோ வாங்கிட்டு வரேன்’ என்று கடைக்கு ஓடினான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்