அண்டர்ஸ்டாண்ட்?

ம்ம ஆளுங்க இப்போவெல்லாம் என்ன மொழி பேசுறாங்கனே புரியலை. தமிழ்ல ஆரம்பிச்சு தங்கிலீஷுக்குப் போய் இப்போ டிகே, நஹி பேட்டானு ஹிந்திமிழ் வரைக்கும் போயிட்டாங்க. சில பேருக்கு எது தமிழ்னே தெரியலை. இவங்க பேசுற கொடுமைலாம் பார்க்கலாம் வாங்களேன்.

நம் ஆளுங்க அட்ரஸ் கேட்கிறதெல்லாம் பார்த்தீங்கனா, செம காமெடியா இருக்கும். அன்னைக்கி ஒருத்தரு அட்ரஸ் கேட்டவர்கிட்ட, நேரா ‘ஸ்ட்ரெயிட்’டா போனீங்கனா, ‘ஆர்ச்’ வளைவு வருமுங்க அப்டியே ‘லெஃப்டு’ல இடது பக்கம்தான் இருக்கு அந்த ஏரியா அப்படினு மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி தமிழ்லேயும் இங்கிலீஷ்லேயும் பெரிய லெக்சரே பண்ணிக்கிட்டு இருந்தார், சரி இவர்தான் இப்படினா அட்ரஸ் கேட்டவரும் அந்த ‘டர்னிங்’ல திரும்புனா பக்கமா தம்பி?னு கேட்டு அவரும் மேஜர் ரசிகர்ங்கிறதை ப்ரூவ் பண்ணிட்டார்.

மளிகைக்கடையில சாமான் வாங்கும்போது இப்போவரைக்கும் நம்ம ஆளுங்க பயன்படுத்துற வார்த்தை ‘சால்ட்’ உப்பு ஒரு பாக்கெட் கொடுங்க அண்ணாச்சி கல் உப்பு ஒரு பாக்கெட் கொடுங்க அண்ணாச்சிங்கிறதுதான். ஏன்யா சால்ட்டுனாலே உப்புதான், அதுல என்னங்கய்யா சால்ட் உப்பு? இந்தக் கொடுமை அந்த தூத்துக்குடி வரைக்குமே நடக்குறதுதாங்க கொடுமை, பப்ளிக் ப்ளேஸ்ல எல்லாம் தமிழ்ல பேசுனோம்னா, நம்மை எல்லாம் ஏதோ தியாகிங்க ரேஞ்சுல ஒரு மாதிரி  பார்க்கிறாங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்