இவய்ங்க எப்பவுமே இப்படித்தான்!

பேங்க் கியூவுல பேனா இருக்கானு கேட்கிற குரல்களை விட ஃபேஸ்புக்ல அக்கவுன்ட் இருக்கானு கேட்கிற குரல்கள்தான் இன்னிக்கு அதிகம். ஆனாலும், ஒரு சில ஃபேஸ்புக் கமென்ட்டர்ஸ் ஐ.டி ஆரம்பிச்ச நாள்லேருந்து அதே மாதிரிதான் இருப்பாய்ங்க...எப்படி? இப்படி!

கும்பிடு குருசாமிகள்: ‘ஆத்தா நா பாஸாயிட்டேன்’னு பதிவு போட்டாலும் அடுத்த வீட்டு தாத்தா செத்துட்டார்னு ஸ்டேட்டஸ் போட்டாலும் அங்கேயும் வந்து காலை வணக்கம் சகோ, மாலை வணக்கம், மத்தியான வணக்கம் சகோனு கமென்ட் போடுவாய்ங்க. வணக்கம்னு கும்பிட்டுட்டு எஸ்கேப் ஆகிடணும்.

சுதியேத்தல் கமிட்டி: இவர்கள் தேர்ந்தெடுப்பது பெரும்பாலும் இலக்கியவாதிகளின் பதிவுகளை. ஒருவரை ஆக்ரோஷமாகத் திட்டிப் போடப்பட்ட பதிவுகளில் சென்று எமோஷனைக் கூட்டுவார்கள். பதிவிட்டவரின் வேகம் குறையும் நேரத்தில் தூக்கலாகக் கொஞ்சம் சில்லி சாஸ் ஊற்றுவதுதான் இவர்களின் முழு நேர வேலையே.

ஆல் பர்ப்பஸ் வானம்பாடிகள்: பெண்களின் போஸ்ட்டுகளில் கமென்ட்டுகள் அடித்துக் கழுவி ஊற்றப்பட்டவர்கள் அடுத்து ‘நீ வா சுருதி...’ என நாடுவது ஃபேக் ஐ.டி-க்களை. கமென்ட் பாக்ஸில் ‘உருகும் பனிமலையே. இன்பாக்ஸ் வரவா கனிமொழியே...’ என கவிதையுடன் (?) உள் நுழைந்து பதிவெங்கும் பாட்டுப் பாடுவார்கள்.

அவுட் ஆஃப் அப்டேட்டர்கள்: ஊரே உட்கார்ந்து ஒரு காலத்தில் கும்மியடித்த கமென்ட்களை அடுத்த வருடத்தில் கமென்ட்டுவார்கள். ‘ஆஹாங்’ என வடிவேலு ரியாக்‌ஷன் கமென்ட் போட்டு நெட்டிசன்கள் ஓய்ந்து கிடக்கும்போது மூன்று மாதங்கள் கழித்து மறுபடியும் பூதமாய் கிளம்ப, இப்படியொரு அப்டேட்டரே காரணம். ‘நாங்க காத்துட்டு  இருக்கோம்’ என நாஞ்சில் சம்பத் சொன்னதைச் சரியாக அடுத்த நவம்பரில் மீம் க்ரியேட் செய்வார்கள் இந்த ஆல் டைம் அப்டேட்டர்கள்.

ஸ்டிக்கர் பாய்ஸ்: எல்லா உணர்ச்சிகளையும் ஒரேயொரு ஸ்டிக்கரிலேயே வெளிப்படுத்தும் வித்தகர்கள் இவர்கள். கமென்ட்டுக்குள் நுழையும்போதே ஸ்டிக்கர் கூடையைக் கையோடு கொண்டுவந்து கொட்டிவிட்டுப் போவார்கள். இதில் அதிகம் ஆதிக்கம் செலுத்துவது பெண்களே என்கிறது ஓர் ஆய்வறிக்கை.

லிங்க் லிங்கேசன்கள்: போட்ட பதிவுக்குத் துளியும் சம்பந்தமின்றி ‘To get more likes... click guyyamuyya.com’ என டிசைன் டிசைனாக காப்பி பேஸ்ட் செய்து, போஸ்ட் போட்டவரை மண்டை காயவைப்பார்கள். அந்த ஆணியை லிஸ்ட்டிலிருந்தே பிடுங்கிவிடுதல் நலம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்