சினிமா விடுகதை!

சிரிச்சே ஆளை மயக்கும் ஹீரோ சினா கானாவின் சினிமாப் பட டைட்டில்கள்தான் இந்த வார சினிமா விடுகதைக்கான விடைகள் பாஸ்...!

1. சூப்பருக்கும் தலைப்புக்கும் கனெக்‌ஷன் இருக்கு. ‘கோல்டு’ டைரக்டரோட படத்துல சினா கானா பாட்டும் பாடி இருக்காரே. என்ன படம் இந்தப் படம்?

2. சென்னை மக்களுக்கு இதான் என்டெர்டெய்ன்மென்ட். மூன்றெழுத்து வார்த்தைக்கும் ஞாயிற்றுக்கிழமை என்ஜாய்மென்ட்டுக்கும் கனெக்‌ஷன் உண்டு. அதென்ன படம்?

3. எத்தனையாவது விடுகதைனு தெரிஞ்சா விடை தெரியுமே மக்கா... ஹீரோ இவர் அல்ல. மூன்றெழுத்து ஆளுனா சொல்லிடுவீங்க மக்கா. என்ன படம் இது? 

4. போலீஸ் படம்னா ஈஸியா சொல்லுவீங்க. டானா டானான்னா டக்குனு சொல்லுவீங்க. ஊதாக்கலரும் சேர்ந்த படத்துல ஒல்லிப்பிச்சானும் கூட இருந்தாரே. என்ன படம் இந்தப் படம்?

5. நாகேஷுக்கும் படத்துக்கும் தொடர்பு இருக்கு. குற்றாலீஸ்வரனுக்கும் சாந்திக்கும்கூட படத்துல இடம் இருக்கு. நயன்கூட ஆட்டம் போட்ட படத்துல எல்லாமே எதிரும் புதிருமா இருக்கு!

6. ஜெமினி காமெடியே டைட்டில் ஆச்சு. சண்டை தெரியாமலே வின் ஆயாச்சு. பீட்டர் பையனுக்காக மீட்டர் மீட்டராய் காதில் ரீல் சுத்திய படத்தில் சினா கானா பாட்டும் போனஸாய் இருக்கு. என்ன படம் பாஸ்?

7. சிக்ஸர் அடித்த சிவனாண்டி சினிமா. பொளேர் கொடுத்த போஸ் பாண்டி சினிமா. வின்னர் வடிவேலு வந்து டைட்டிலைச் சொல்லாமலே ஈஸியா சொல்லிடுவீங்கதானே...?

8. ரெண்டு ஹீரோ படத்துக்கு ரெண்டு சூப்பர் ஸ்டார் டைட்டில். பட்டை போட்ட ஆளுக்கு குட்டை ஹீரோயின் ஜோடி! இப்போ சொல்லுங்க பார்ப்போம்.

விடைகள்:

1. ரஜினி முருகன், 2. மெரினா, 3. 3, 4. காக்கிச் சட்டை, 5. எதிர்நீச்சல், 6. மான் கராத்தே, 7. வருத்தப்படாத வாலிபர் சங்கம், 8. கேடி பில்லா கில்லாடி ரங்கா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்