சுட்ட படம்

ங்கர் உள்ளிட்ட படா டைரக்டர்களின் படங்களில் பப்ளிசிட்டி டிசைனராக கலக்கி வரும் சித்தார்த் சந்திரசேகரைத் தெரியுமா? விஷ்ணு விஷாலை வைத்து அவர் எடுத்த ‘பலே பாண்டியா’ என்ற படம் 2010-ல் ரிலீஸாகிப் பெரிதாக ஓடவில்லை. அந்தப் படம் 1990-ல் ரிலீஸான ‘I Hired a Contract Killer’ என்ற பிரிட்டிஷ் படத்தின் காப்பி!

ஒரிஜினல் ‘I Hired a Contract Killer’ படத்தின் கதை என்னவென்று பார்ப்போமா? ஹீரோ ஹென்றி பௌலாங்கர் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவன். லண்டனில் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கிறான். எல்லாம் நன்றாகப் போனால்தான் வாழ்க்கையில் சினிமாவே தேவை இல்லையே? 15 வருடங்களாக வேலை பார்த்துக்கொண்டிருந்த அந்த லண்டன் கம்பெனி வேலையில் இருந்து தூக்கப்படுகிறான். ஒரே நாளில் அவனுக்குப் பொருளாதார ரீதியாக எல்லாமே தலைகீழாக மாறிப்போகிறது. தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முடிவினை எடுக்கிறான். ஒவ்வொரு முறை அவன் தற்கொலை முயற்சி செய்யும்போதும் அது சக்சஸ் ஆகாமல் உயிர் பிழைக்கிறான். தானாக தற்கொலை செய்துகொண்டால் எப்படியாவது முட்டுக்கட்டை விழுந்து விடுகிறது என்பதால் கென்னத் கோலே என்ற கூலிக் கொலைகாரனை பணம் கொடுத்து அவனுக்கே தெரியாமல் செட்-அப் செய்கிறான். தன்னையே கொல்ல நியமிக்கப்பட்ட அந்த ஆளால் தீவிரமாக தேடப்படும்போது பெரிய ட்விஸ்ட்டாய் அவன் மார்கரேட் என்ற அழகியைச் சந்திக்கிறான். வாழ்க்கையை பாஸிட்டிவாக வாழும் அவளால் வாழ்தல் இனிது என்பதை உணர்ந்து மனம் மாறுகிறான். நேரில் பார்த்திராத அந்த கான்ட்ராக்ட் கொலைகாரனைத் தொடர்புகொண்டு தன்னைக் கொல்ல வேண்டாம் எனச் சொல்ல நினைக்கிறான். ஆனால் அவனைத் தொடர்புகொள்ளவே முடியாமல் போகிறது. ஒருபுறம் கன்னாபின்னா காதல், மறுபுறம் கொலைகாரனின் கொலைவெறி சேஸ், இவற்றுக்கு நடுவே ஹென்றி உயிர் பிழைத்தானா? காதலி மார்கரேட்டின் கரம் பிடித்தானா? என்பதே படத்தின் திக் திகீர் பக் பகீர் க்ளைமாக்ஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்