ஆஃப் த ரெக்கார்டு!

விரல் நடிகர் சரியாக ஒத்துழைக்காததால் அச்சமான படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்து நடிகரைக் கடுப்பேற்றினாராம் புத்த இயக்குநர். மேலும், தெலுங்குப் பதிப்புக்கு விழா நடத்தியும் வெறுப்பேற்றினாராம்!

இரண்டு முகம் படத்தில் நம்பர் நடிகைக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுவதால், தனக்கும் அதே முக்கியத்துவம் வேண்டும் என இயக்குநரை நச்சரிக்கிறாராம் ஓகே நடிகை. மேலும் ஹீரோவோடு தனக்கு ஒரு டூயட் வைக்கச் சொல்லியும் கேட்டு வருகிறாராம்!

இதய வாரிசு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து விட்டதால், தன்னை ஹீரோவாக வைத்து படம் தயாரிக்கத் தேடிவரும் தயாரிப்பாளர்களிடம் ஒரு பெரிய தொகையைக் கொடுங்கள், முதல் பிரதி அடிப்படையில் நானே தயாரித்துத் தருகிறேன் என அதிர்ச்சி அளிக்கிறாராம்!

ஒல்லி நடிகரின் அப்பா எடுத்த இங்கிலீஷ் மணி படம், ரிலீஸ் செய்யப் பணம் இல்லாததால், பெட்டிக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறது. தன் மகனிடம் படத்தைப் போட்டுக் காட்டி அப்பா பணம் கேட்க, இந்தப் படத்தை ரிலீஸ் செய்து மானத்தை வாங்காதீங்க எனச் சொல்லி விட்டாராம் ஒல்லி!

பிரகாச நடிகர் சென்னையின் மையப்பகுதியில் இரண்டு தெருக்களை இணைக்கும் அளவிற்கு எட்டு கிரவுண்டில் 100 கோடி மதிப்பில் ஒரு பிரமாண்ட பங்களாவைக் கட்டியுள்ளார். விரைவில் அந்த பங்களாவில் குடியேறவுள்ள அவரை நினைத்துத் திரையுலகில் பலரும் பொறாமையில் உள்ளார்களாம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்