இவங்க இப்படித்தான்!

எம்.ஜி.ஆர்னா மூணு தடவை அடி வாங்கிட்டு நாலாவது தடவைதான் திருப்பி அடிப்பார். கருப்பு எம்ஜிஆர் னா, அடிக்க ஆரம்பிச்ச அஞ்சாவது நிமிசத்துல லெப்ட் காலை சுவத்துல வெச்சு ரைட் கால்ல கிக் விட ஆரம்பிச்சுருவாருனு சினிமாவில் மட்டும்தான் இந்த மாதிரி சிம்ப்டம்ஸ் மேனரிசம்கள் இருக்கா? கிரிக்கெட்லேயும் இருக்குது பாஸ். கண்டுபிடிக்கலாமா?

ஒன் டே மேட்சில் எல்லாம் கங்குலி ஓப்பனிங் இறங்கி ஆடுகிறார்னா, கரெக்டா 13.3-வது ஓவரிலோ 13.4-வது ஓவரிலோ ஸ்பின் பால்ல ரெண்டு ஸ்டெப் முன்னாடி வந்து கரெக்டா ஸ்ட்ரெயிட்ல சிக்ஸர் அடிப்பார். ஹ்ம்ம்ம். அப்போவெல்லாம் சிக்ஸரை கண்ணுல பார்க்கிறதே அபூர்வம் பாஸ்...

சச்சின் 85 ரன் அடிச்சுட்டார்னா, கண்டிப்பா விக்கெட் கீப்பருக்குப் பின்னாடி ஒரு ஸ்வீப் ஷாட் ஆடுவார். அதிகபட்சம் எப்போதுமே அது பெளண்டரியாதான் இருக்கும். 75 ரன்னைத் தாண்டிய பிறகு யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் ஓர் அட்டகாசமான ஷாட் லாங்-ஆனிலோ, முட்டிப்போட்டு எக்ஸ்ட்ரா கவரிலோ, கட் ஷாட்டாக ஸ்கொயர் லெக்கிலோ ஆடுவார். தமிழ்ல சொல்லணும்னா அப்படியே வாரிவிட்டு அடிப்பார்னு சொல்லலாம்.

உலக கிரிக்கெட்டோ உள்ளூர்ல நடக்கிற சாதாரண பீச் கிரிக்கெட்டோ ஷேவாக் மட்டும் ஒரே அடிதான். அதுவும் அந்தச் சாவடிதான். ஒரு ஓவர்ல நாலாவது பால்ல ஃபோர் அடிக்கிறார்னா, அடுத்த பால் எந்த டைரக்‌ஷனில் போட்டாலும் அதையும் முன்னாடி அடிச்ச அதே பிளேஸ்ல அதே மாதிரி ஃபோர் ரன்னாக அடிப்பார்.  பெளலிங் பக்காவாக செட் பண்ணி பில்டப்போட யாராச்சும் பந்து போட வந்தாங்கனா,  அவங்களோட கதி அதோ கதிதான்... வேறென்ன? மொத பாலே தெறி பேபிதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்