தல-தளபதி சேர்ந்து நடித்தால்..?

ல - தளபதி சேர்ந்து நடிச்சா நல்லாருக்கும்... நல்லாத்தானே இருக்கும்னு அலறும் நண்பர்களே, அந்த வரலாற்று சிறப்புமிக்க சம்பவம் மட்டும் நடந்தால், இந்தச் சமுதாயத்தில் என்னென்ன நடக்கும் தெரியுமா?

தல - தளபதி சேர்ந்து நடிக்கப் போறாங்கங்கிற செய்தி வெளியானதும் ட்விட்டரே தல, தளபதி ரசிகர்களின் காலைப் பிடிச்சுக் கதறும். ஃபேஸ்புக் சர்வரே படுத்துடும். இரண்டு, மூன்று வாரத்துக்குப் பித்துப் பிடிச்ச மாதிரியே திரிஞ்சுக்கிட்டு இருப்பாய்ங்க.

டீஸர், டிரெய்லர், ஆடியோனு எது ரிலீஸ் ஆனாலும் மீம்ஸ் போட்டுத் தெறிக்கவிடுவார்கள். தலயும், தளபதியும் அநேகமாக டிரெய்லரில் ‘ஜானி ஜானி எஸ் பாப்பா’ ரைம்ஸ் பாடினாலும் பாடுவர்கள்.

இந்தக் கலவரத்தில் சிக்கி சின்னாபின்னமாவது சூர்யா ரசிகர்களாகத்தான் இருக்கும். எனவே, சூர்யா ரசிகர்கள் எல்லோரும் சுமேரியா, சூடான் என ஏதாவது ஒரு நாட்டுக்கு போலி பாஸ்போர்ட் எடுத்துக் கிளம்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஃப்ளெக்ஸ், பேனர்களில் விஜய்யும் அஜித்தும் கட்டிப்பிடித்து உருண்டு, பாசமழை பொழிந்து கொண்டிருப்பார்கள். ரசிகர்களும் ‘சென்னை வெள்ளத்துக்குப் பிறகு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே ஒற்றுமையாக்கி இருப்பது இந்தப் படம்தான்’ என ஃபீலிங் ஸ்டேட்டஸ் தட்டுவார்கள்.

படத்தில் யாருக்கு முதலில் டைட்டில் கார்டு போடுகிறார்கள், யாருக்கு மாஸான இன்ட்ரோ சீன் வைக்கிறார்கள் என்பது உன்னிப்பாகக் கவனிக்கப்படும். எப்படியும் முதல் காட்சியிலேயே தியேட்டர் சீட்டுகள் டெல்லி அப்பளம் போல் நொறுங்கிப்போய்க் கிடக்கும்.

அந்தப் படத்தை எந்த இயக்குநர் எடுத்தாலும், அதுதான் அந்த மனுஷனுக்கு கடைசிப் படமாக இருக்கும். படம் நல்லா கல்லா கட்டுவது போய் சூப்பராக இயக்கியிருந்தாலும் பாராட்டியே ஓய்த்துவிடுவார்கள். இதே மொக்கையாக இருந்தது என்றால் இயக்குநர் வீட்டுக்குள் பால்கனி வழியாக பாறாங்கல் வந்து விழும்.

படத்தில் விஜய்யும், அஜித்தும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வது போன்ற காட்சி வைக்கப்பட்டிருந்தால், கண்டிப்பாக இது மூன்றாம் உலகப்போரை உருவாக்கும் ஐடியாவில்தான் இந்தப் படத்தை எடுத்துருக்காய்ங்கனு கண்டிப்பாக நம்பலாம்.

ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் தல, தளபதி ரசிகர்கள் ‘படத்தோட வசூல் 570 கோடி டாவ்வ்வ்..., மலேசியாவில் தனியா 130 கோடி டாவ்வ்வ்வ்....’ என மாறி மாறி வாயிலேயே மசால்வடை சுடுவார்கள். ‘நம்மளோட அடுத்த டார்கெட் சல்மான், ஷாரூக் தான்’ என அரைகுறை இந்தியில் ‘கான்’ ரசிகர்களிடம் கட்டையைப் போடுவார்கள்.

உண்மையிலேயே தலயும் தளபதியும் சேர்ந்து நடிச்சா இதெல்லாமும் நடக்கும், இதற்கு மேலேயும் நடக்கும். அதனால், தமிழ் மக்களாகிய நாம் நம்மை தற்காத்துக்கொள்வது அவசியம். சொல்லிப்புட்டேன்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்