கதை விடுறாங்க!

‘நள்ளிரவில் தனியாக நடந்து சென்ற சிவாவை நாலைந்து தெருநாய்கள் ‘குறுகுறு’ வெனப் பார்த்தன.அப்போது...’

- இந்த வரியை நம் ஃபேஸ்புக் பக்கத்தில் கொடுத்து சுவாரஸ்யமான கதையாக உருவாக்கச் சொல்லியிருந்தோம். வாசகர்கள் உருவாக்கிய கதைகள் இதோ...!

ராகவன்: அவன் கல்லைத் தூக்கி எறிந்தான். ஒரு நூல் இழையில் மிஸ் ஆகிடுச்சு. உடனே அந்த நாய் தகதகனு குதிச்சு அவன்கிட்ட ஓடிவந்து அவன் காலில் உச்சா போயிடுச்சு.

சண்முக சுந்தரம்: அப்போது கையில் இருந்த மந்திரக்கோலை எடுத்து அந்த நாய்களை ஆடுகளாக மாற்றி இழுத்துக்கொண்டுபோய் கசாப்புக் கடையில் விற்றுவிட்டு வீடு திரும்பினான் மந்திரவாதி சிவா.

ராம்:  “உன் பொன்டாட்டி வெச்ச சோத்தைத் தின்னுட்டு முணு நாளா நாங்க பட்ட பாடு... அடேய் நீ மட்டும் எப்பூடிடா?” என நாய்கள் அவனைப் பார்த்து பேசின.

உதயகுமார்: அப்போது சிவா தன் மொட்டைத்தலையைத் தடவிக்கொண்டே ‘மொட்ட சிவா கெட்ட சிவாடா’ என பன்ச் டயலாக் பேச அந்த நாய்கள் அதைக் கேட்டு பயந்தோடின.

ராம்குமார்: சிவா பயப்படாமல் தன் செல்போனில் அந்த நாய்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டான். உடனே அதை ஃபேஸ்புக்கிலும் போட்டுவிட்டான். சிவாவின் தைரியத்தைப் பாராட்டிவிட்டு நான்கு நாய்களும் இடத்தைக் காலிசெய்தன. மறுநாள் காலை ஃபேஸ்புக்கை ஓப்பன் செய்து பார்த்தபோது சிவா அதிர்ந்து போனான். காரணம்... வந்திருந்த கமென்ட்ஸ் எல்லாம், ‘நாய்கள் ஐந்தும் அருமை’ என்றிருந்தன!

பாலமுருகன்: அப்போது அவனுக்குப் பள்ளிக்கூடத்தில் படித்த கரடிக்கதை ஞாபகம் வந்து அங்கேயே படுத்துக்கொண்டான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்