தக்காளிடா!

க்காளியின் விலை பற்றவைத்த ராக்கெட்டைப் போல தொடர்ந்து மேல்நோக்கிச் சென்றுகொண்டே இருக்கிறது. இந்த விலையேற்றம் காரணமாக தக்காளி என்னவாக எல்லாம் மாறும்னு யோசிச்சதில்...

சமையலைக் கண்டுபிடித்தவனே சரண்டர் ஆகும்படி புதிது புதிதாய் சமையலில் ஏதாவது ஒன்றைக் கண்டுபிடிக்கும் பேச்சுலர்கள், யூஸ் பண்ணாம வெச்சுருக்கிற தக்காளி சாஸை எடுத்துக் கொதிக்கிற குழம்பில் பிழிஞ்சுவிட்டு விஞ்ஞானத்தோட வீம்பா விளையாடுவாங்க.

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர், அதிகப் பொருட்செலவில் சரக்கு ரயில் முழுக்க தக்காளிகளை நிரப்பி ஹீரோ, ஹீரோயினை குறுக்கும் மறுக்குமாக ஆடவிடலாம்.

‘வருமான வரித்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் 570 கூடை தக்காளி சிக்கியது’ என்ற செய்தி தமிழ்நாட்டின் ஹாட் டாப்பிக்காக மாறலாம்.

‘ஒரு கிலோவிற்கும் அதிகமாக தக்காளி வைத்திருப்பவர்கள் இனி நிம்மதியாகத் தூங்க முடியாது’ என அருண் ஜெட்லி எச்சரிக்கை விடுக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்