இது நமக்குத் தேவையா?

மிழ் சினிமாவை உலகமே உத்துப் பார்க்கணும்னு வெறிகொண்டு சில இயக்குநர்கள் முயற்சி எடுத்தா, படம் முழுக்க ரைமிங் பன்ச் கொடுத்துக் கூட்டத்துல கட்டுச்சோத்தை அவுத்துவிடுவாங்க சில இயக்குநர்கள். ‘அந்த மரத்தைப் பாரேன், கம்முனு இருக்கா? காத்து அடிக்கும்போது பாரு, கும்முனு இருக்கும்’னு ரசனையைக்கூட ரைமிங்காதான் பேசுறாங்க. போறபோக்குல நம்மாளுங்க கேஷூவலா பேசுறதையும் ரைமிங்கா பேச ஆரம்பிச்சுட்டா, எப்படி இருக்கும்? இதோ இப்படித்தான்!

அப்பா & மகன்: ‘நீயெல்லாம் உருப்படவே மாட்டடா’ - ‘உருப்புடுறதையும் உருப்படாததையும் உருப்பட்டவர் சொல்லணும், அதுவும் உருப்படியா ஏதாச்சும் சொல்லணும்!’

லவ் புரபோஸ் பண்றவங்க: ‘காதலிக்கிறது கல்யாணம் பண்றதுக்கு. கல்யாணம் பண்றது கடைசிவரைக்கும் வாழ்றதுக்கு. கடைசிவரைக்கும் வாழுறதுக்கு நாம ஏன் காதலிக்கக் கூடாது, கல்யாணம் பண்ணிக்கக் கூடாது, கடைசிவரைக்கும் வாழக் கூடாது?’

அரசியல்வாதி:
‘கட்சிக்காரன் வெச்சான் வேட்டு, மக்கள் போடலை ஓட்டு, அதை நீ கேட்டு, தலைவர்கிட்ட கொடுக்குறேன் போட்டு!’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்