எவ்ளோ கஷ்டம்!

ரு நாள் ஆரம்பிக்கிறதுல இருந்து நம்மை வெச்சு என்னென்ன அக்கப்போர்களையெல்லாம் இந்தச் சமூகம் நடத்துதுனு யோசிச்சாலே பேச்சு வராது பாஸ். தெளிய வெச்சுத் தெளிய வெச்சு அடிக்கிறதுனு சொல்லுவாய்ங்க. அது இதானா?

தமிழ்நாடு மின்வாரியம் தெளியவெச்சு அடிக்கிறதுல ரொம்ப ஃபேமஸ். ரெண்டுமணி நேரம் கரன்ட் இருக்கும். அடுத்த ரெண்டுமணி நேரம் இருக்காது. இப்படி டயர்ட் ஆகவிடாம கேப் விட்டு கேப் விட்டு அடிப்பாய்ங்க.

அந்த நாளை அடிச்சு ஆரம்பிச்சு வைக்கிறதுக்கு ஆள் வேணும்னு அவசியம் இல்லை. அலாரமே போதும். இன்னிக்காச்சும் சீக்கிரமா எழுந்திரிக்கலாமேனு எட்டு மணிக்கு அலாரம் வெச்சா, அதுவும் சரக்கடிச்சுட்டு ஃபுல் மப்புல தூங்கின மாதிரி அசையாமக் கொள்ளாமப் படுத்திருக்கும். நாமளே குத்துமதிப்பா பத்து மணிக்கு எழுந்து பல் துலக்கலாம்னு சுருட்டிச் சுருட்டி ரோல் ஆகிப்போன பேஸ்ட்டைப் பிதுக்கினா பிதுக்கிட்டே இருக்க வேண்டியதுதான். இருந்தாதானே வரும்!

அதையெல்லாம் சமாளிச்சு அடிச்சுத் தண்ணியைப் பிடிச்சுக் குளிச்சு, அப்படி இப்படினு கிளம்பி ஆபீஸுக்குப் போகும்போது ஆட்டோக்காரங்க சைடு மிரர்ல கையைத் தட்டிவிட்டதும் இல்லாம நம்மைத் திட்டிட்டும் போவாங்க.

போகிற வழியிலேயே ஒரு ஹோட்டல்ல தோசை சாப்பிடலாம்னு உட்கார்ந்தா, தோசை இல்லை... இட்லி சாப்பிடுங்கனு ஐடியா கொடுப்பாய்ங்க. சரி அது நல்லா இருக்கும்னு நம்பி உட்கார்ந்தா நெம்பிருவாய்ங்க. இட்லினு பேரு வெச்சா மட்டும் போதுமா மிஸ்டர்ஸ்? ஆபிஸுக்குப் போனதும் ஒரு டீ வாங்கிக்கொடுத்துத் திரும்பத் தெளிய வெச்சு அடிக்கிறதையெல்லாம் எழுதினா எடிட்டோரியலைத் தாண்டி மேட்டர் டைம்பாஸுக்கு வராது பாஸ். அவ்வ்வ்வ்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்