அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

தட் ‘ரூம் போட்டு யோசிப்பாங்களோ?’ மொமென்ட்:

‘சைக்கிளில் போலீசார் ரோந்து செல்லும் திட்டம் பழையபடி நடைமுறைக்கு வரப்போகிறது’ என்ற செய்தியை செய்தித்தாளில் படிச்சேன். வெத்தலை பாக்குக் கடையிலேயே வெட்டியா சி.சி.டி.வி. வெச்சுக்கிட்டிருக்கிற காலத்துல நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் ஒரு கண்காணிப்பு கேமரா கிடையாது. கொலை நடந்தபிறகு பேட்டி கொடுத்த ரயில்வே காவல்துறை அதிகாரி, ‘‘வழக்கமா செங்கல்பட்டைத் தாண்டித்தான் இந்த மாதிரி கொலையெல்லாம் நடக்கும்’’னு அசால்ட்டா பேட்டி தட்டுறார். ஏதோ சீஸன் டிக்கெட் எடுக்கவந்த மாதிரி, கொலையாளி நிதானமா கொலை பண்ணிட்டு நிதானமா நடந்துபோயிட்டார். இது நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன்லைனா, வியாசர்பாடியில் பட்டப்பகலில் கொலை, நந்தனம் சிக்னலில் நடுரோட்டில் கொலைனு தலைநகரமா இருந்த சென்னை கொலைநகரமாகிட்டு இருக்கு. குவாலிஸ் கார் வெச்சு ரோந்து சுத்துற போலீஸே குற்றங்களையும் தடுக்க முடியலை; இதில் சைக்கிளில் ரோந்து போய்க் குற்றவாளிகளைப் பிடிப்பாங்களாமாம். தமாசு தமாசு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்