சினிமா விடுகதை!

காமெடியில் சுளுக்கெடுக்கும் சூரியின் சினிமா டைட்டில்கள்தான் இந்த வார சினிமா விடுகதையின் விடைகள் பாஸ்..!

1.     காமெடியைப் பறக்கவிட்ட கொடி. சங்கமே அபராதத்தில் ஓடினாலும் இப்போ இருக்கிற பல வாட்ஸ்-அப் குரூப்புகளை இப்படியும் அழைக்கலாமே ஃப்ரெண்ட்ஸ்..!

2.     டபுள் ஹீரோ படத்துல சோலோ காமெடியன் இவர். பொண்டாட்டி கையில் அடிவாங்கியவர். திருச்சிப் படத்துக்கு ரெட்டை டைட்டில்! என்ன படம் பாஸ்?

3.     காமெடி மட்டும் இல்லை சென்டிமென்டாவும் நடிக்கத் தெரியும்னு பேச வெச்ச படம். மூன்றெழுத்துப் படத்துல மூன்றெழுத்து ஹீரோ, நான்கெழுத்து ஹீரோயின். என்ன படம் ஞாபகத்துக்கு ‘வருது’?

4.     நம்ம ஆளுங்களைப் பாராட்டுறதா நினைச்சு குறைச்சு மதிப்பிடுற டைட்டில் இது! சக்கரை பொண்டாட்டி பேரு புஷ்பானு சொன்னா ஈஸியா கண்டுபிடிப்பீங்களே மக்கா!

5.     ஹீரோவுக்கு ஃப்ரெண்டா..? டிரைவரா? ரெண்டு ஹீரோயின் சப்ஜெக்ட்ல வம்பு ஹீரோ நடிச்சாரே..! ரொம்ம்ம்ம்ம்ப நாள் கழிச்சு தியேட்டருக்கு வந்த படம். என்ன படம் இது?

6.     50-வது படம் இப்படியா இருக்கணும்? கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கி வெச்சும் படம் தியேட்டரை விட்டு அஞ்சி ஓடுச்சே..!
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்