"100 குழந்தைகளுக்கு அப்பா ஆகணும்!"

‘100 லட்சியம்... 50 நிச்சயம்!’ என நம் ஊர் அரசியல்வாதி போலவே சொல்கிறார் பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது கில்ஜி. அதென்ன 50, 100? சிம்பிள்... சர்தார் ஜான் முகமது கில்ஜிக்கு 35 குழந்தைகள், மூன்று மனைவிகள். 46 வயதில் அண்மையில் அவர் கொடுத்திருக்கும் பேட்டியில் தான் ‘100 குழந்தைகளுக்கு அப்பா ஆவதுதான் என் வாழ்நாள் லட்சியம்’ என்று சொல்லி இருக்கிறார்! பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் இருக்கும் குவேட்டா நகரில் மருத்துவ உதவியாளராக வேலை பார்க்கிறார் முகமது கில்ஜி.

‘‘எனக்குக் குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். வேலைக்குப் போய்விட்டு வீட்டுக்கு வந்ததும் குழந்தைகளோடும் மனைவிகளோடும் வீட்டில் தேநீர் குடிப்பதே திருவிழா போல இருக்கும். கடவுள் எனக்குக் கொடுத்த அருட்கொடை என் குழந்தைகள்’’ என்று புளகாங்கிதம் அடைகிறார் கில்ஜி.

அவர் இப்படிச் சொன்னாலும், ‘‘பலதார மணம் இன்னும் முழுமையாக பாகிஸ்தானில் ஒழிக்கப்படவில்லை என்றாலும் பெண்களை பிள்ளைப் பேறுக்கான மெஷினைப்போல நடத்துவது கண்டிக்கத்தக்கது’’ என்று முகமது கில்ஜிக்கு எதிராகக் கொடி பிடித்திருக்கிறார் அந்நாட்டின் பிரபல பெண் உரிமைப்போராளி ரஃபியா ஜக்கரியா.

ஆனால் அதற்கு கோபமே படாமல் தன் மூன்று மனைவிகளோடு ஒற்றுமையாக ஒரே வீட்டில் சந்தோஷமாக வசித்து வருகிறார் கில்ஜி. ‘‘மனைவிகளுக்குள் புரிதல் அதிகமாக உள்ளது. அவர்கள் என்னையும் நான் அவர்களையும் நன்கு புரிந்து வைத்திருக்கிறேன். அதனால் ஒருநாளும் அவர்களுக்குள் சண்டை வந்ததே இல்லை. எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறோம். நான்காவது மனைவியைக் கண்டடைந்ததும் 100 குழந்தைகளைப் பெற்றுக்கொள்வேன்!’’ என்று அதிரடி ஸ்டேட்மென்ட் வேறு விடுத்திருக்கிறார்.

சரி ஒரு குழந்தைக்கே ஃபீஸ் கட்ட முடியாமல் திணறும் நமக்குள் எழும் கேள்விக்கும் அவரிடம் பதில் இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்