சினிமால்

ஜித்தின் மைத்துனி ஷாமிலி, ‘வீர சிவாஜி’ படத்தைத் தொடர்ந்து வேறு எந்தப் படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. காரணம், கதை கேட்டு கணிக்கத் தெரியாதாம். இதனால் தன் அக்கா ஷாலினியையே கதை கேட்கச் சொல்லிவிட்டாராம். தற்போது அக்கா ஷாலினி மொத்தம் மூன்று கதைகளை ஓகே செய்து வைத்திருக்கிறாராம். ‘வீர சிவாஜி’ ரிலீஸுக்கு அப்புறம் அவற்றில் நடிக்க ஒப்பந்தம் போடுவாராம். மறந்தும் கூட மைத்துனி விஷயத்தில் தலையிடுவதில்லையாம் அஜித். அந்தக் கோட்டைத் தாண்டி வரமாட்டேன்!

ரஜினியை வைத்து பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பி.வாசு, கன்னடத்தில் இயக்கிய ‘சிவலிங்கா’ சூப்பர் ஹிட் ஆக, அதே படத்தை ரஜினியை வைத்து இயக்க முயற்சித்து, கடைசியாக ராகவா லாரன்ஸை வைத்து இயக்கும் முடிவுக்கு வந்து விட்டார். வடிவேலு காமெடியனாக நடிக்க, ‘குத்துச்சண்டை’ ரித்திகா சிங் நாயகியாக நடிக்கிறார். ‘சந்திரமுகி 2’ எனப் பெயர் வைக்கத் திட்டமிட்ட அவர், ரசிகர்கள் ரஜினியின் சந்திரமுகியை எதிர்பார்த்து வருவார்கள் என்பதால் படத்துக்கு ‘சிவலிங்கா’வையே தலைப்பாக்கி விட்டாராம். அதுலயும் ‘லிங்கா’ இருக்கே!

எந்த நடிகைக்கும் அவரது உண்மையான வயதைக் கேட்டால் கோபம் பொத்துக் கொண்டு வரும். அப்படித்தான், நடிகை சோனம் கபூரின் அப்பா அனில் கபூர் கலந்து கொண்ட ஒரு விருது வழங்கும் விழாவில் உங்கள் வயது என்ன? என கரண் ஜோகரும், ஷாகித் கபூரும் கொஞ்சம் ஜாலியாகக் கேட்டுவிட்டார்களாம். உடனே கோபம் வந்து விறுவிறுவென நடையை கட்டி விட்டார். பொண்ணுங்ககிட்ட வயசைக் கேட்கலாமா?

பாலிவுட்டில் இப்போ செல்லக்குட்டி அலியாதான். இயக்குநரிலிருந்து ஹீரோ வரை பாராட்டுகிறார்கள். அதனால் தானோ என்னவோ அம்மாவாக நடிக்க தயக்கம் காட்டி வந்த முன்னாள் கனவுக்கன்னி மாதுரி தீட்சித், அலியாவுக்கு அம்மாவாக ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். கரண் ஜோகர் தயாரிக்க, அர்ஜூன் கபூர், வருண் தவான் நடிக்கும் இந்தப் படத்தில் அலியா பட்டுக்கு அழகான அம்மா மாதுரி தீட்சித் தான். அர்ஜூன் கபூருக்கும் அழகான மாமியார் கிடைச்சாச்சு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்