ஆஃப் த ரெக்கார்டு!

கோட் நடிகர் பாணியில் இனிமேல் பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்ளக் கூடாது என்ற முடிவில் இருக்கிறாராம் பன்ச் நடிகர். அதனால்தான் தனது பிறந்த நாளன்று வெளியூர் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள சம்மதித்தாராம்!

கொழுக் மொழுக் நடிகைக்கு பட வாய்ப்புகள் மிகவும் குறைந்துவிட்டதால் அநியாயத்துக்குப் புலம்புகிறாராம்!

பஞ்சாயத்து நடிகை இயக்கிய படத்தை அதன் தயாரிப்பாளர் வெளியிடாமல் இழுத்தடிப்பதால், அடுத்து ஒரு படத்தை இயக்கி அதற்கு முன்பே ரிலீஸ் செய்கிறேன் என சபதத்தோடு இறங்கிவிட்டாராம்!

ஒல்லி நடிகரோடு புத்த இயக்குநர் நட்பாகப் பழகுவதும், அவரை இயக்குவதும் விரல் நடிகருக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லையாம். இதனால்தான் கடந்த சில மாதங்களாகவே விரல் நடிகர், இயக்குநரை விட்டு மெதுவாக விலகி வருகிறாராம்!

உயிர் நடிகர் மார்க்கெட் அதல பாதாளத்தில் இருப்பதால் அவரை ஹீரோவாக வைத்துப் படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு ஃபைனான்ஸ் கொடுக்கக்கூட யாரும் தயாராக இல்லையாம். இதனால் அவர் நடித்த படமும், நடிக்கும் படங்களும் அப்படியே கிடக்கின்றனவாம்!

செயின் பறிப்பு படத்தை குறிப்பிட்ட விலைக்கு வாங்கினார் வினியோகஸ்தர் ஒருவர். படத்தைப் பார்த்த சிலர் ஆஹா, ஒஹோ எனப் புகழ, பேராசையில் மூன்று மடங்கு பணம் கொடுங்கள் என தயாரிப்பாளர் கறாராய் நிற்க, வாங்கிய வினியோகஸ்தர் விலகிவிட்டாராம். படத்தின் ரிசல்ட்டால் வந்ததும் போச்சே எனப் புலம்பி வருகிறாராம் தயாரிப்பாளர்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்