கதை விடுறாங்க!

20 வருடங்களாக கோமாவில் இருந்த கோபால், அன்று கண்விழித்ததும்...

- இந்த வரியை நம் ஃபேஸ்புக் பக்கத்தில் கொடுத்து சுவாரஸ்யமான கதையாக உருவாக்கச் சொல்லியிருந்தோம். வாசகர்கள் உருவாக்கிய கதைகள் இதோ...!

சுரேஷ்: அன்று கண்விழித்ததும் செய்தித்தாளை எடுத்துப் பார்த்தார். அதில் ‘மாப்பிள்ளை தேடிக்கொண்டிருப்பதாகவும் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும்’ வெளியான நடிகை த்ரிஷாவின் பேட்டியைப் படித்து அதிர்ச்சியாகி மீண்டும் கோமாவில் விழுந்தார்.

தவராம்குமார்: வீட்டில் இருந்து பக்கத்து நகரத்திற்குச் செல்ல விரும்பி பஸ்ஸில் ஏறினான். டிக்கெட் விலையைக் கேட்டவுடன் அதிர்ச்சியில் உறைந்து பஸ்ஸிலிருந்து இறங்கி பக்கத்தில் இருந்த பெட்டிக்கடையில் ஜிஞ்சர் ஒன்று கேட்டான். கடைக்காரர் அப்படீன்னா என்ன? என்று கேட்டவுடன் தலைசுற்றி மயங்கி மறுபடியும் கோமாவிற்கே போனான்.

தினேஷ்: முதல் கேள்வியாக ‘விஜய் அண்ணா ஆஸ்கர் வாங்கிட்டாரா?’ என டாக்டரிடம் கேட்டான். அதற்கு ‘ நீ திரும்ப கோமாவுக்கே போயிடு கோபாலு’ எனக் கூறிவிட்டார் டாக்டர்.

இளந்தமிழ்: அவன் கண்ணுக்கு ஒரே புகைமண்டலமாக தெரிந்தது. இதுதான் மேலோகமா என்று எண்ணிய சில நொடிகளில் அந்தப் புகை மறைந்துவிட்டது. அப்போதுதான் புரிந்தது, அது கொசுமருந்து என்று. அன்றுமுதல் அவன் ‘கொசுமருந்தால் கோமாவிலிருந்து மீண்ட கோபால்’ என அழைக்கப்பட்டான்.

ஆனந்த சத்யா: 20 வருடங்களாக கோமாவில் இருந்த கோபால், அன்று கண்விழித்ததும் டாக்டர் அவனைப் பார்த்து ‘என்ன ஆச்சு?’ என்றார். அதற்கு கோபால் ‘குழந்தை அழுதுச்சி. உட்வர்ட்ஸ் கிரேப் வாட்டர் கொடுக்கச் சொல்லு’ என்று சத்தம் போட்டு சிரித்தார். ஆனால் அவரைத் தவிர எல்லோரும் இந்த அரதப் பழைய ஜோக்கைக் கேட்டு காண்டாகினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்