இந்த ஊருக்கு இதுதான் ஆச்சு!

ற்ற ஊர்களிலிருந்து சென்னைக்குப் புதிதாய் வருபவர்கள் டெம்ப்ளேட்டாய் சில வசனங்கள் பேசுவார்கள். அதில் ‘கூப்பிட்டால்கூட மதிக்காம இவ்ளோ வேகமா இவிய்ங்க எங்கதான் போறாய்ங்க? கால்ல சுடுதண்ணி ஊத்துன மாதிரி இவிய்ங்க எங்கே போய்க்கிட்டு இருக்காய்ங்க..?’ என்பதுதான். உண்மையில் சென்னைவாசிகள் அப்படி எங்கேதான் போறாங்க? என ஏழாம் அறிவில் எண்ணெய் ஊற்றி எரிய விட்டதில்...

போனில் ‘அஞ்சு நிமிஷத்துல அங்கே இருப்பேன்’ எனக் கூறி கட் செய்துவிட்டு, போர்வையை விலக்கி எழுந்து, பல் விலக்கப் போகும் பழக்கம் சென்னையில்தான் தோன்றியது. அவர்கள்தான் அவசரகதியாய் அப்படி அரக்கப் பறக்க ஓடுகிறார்கள்.

‘உங்க பையன் பக்கத்துல இருந்த பையனைக் கடிச்சு வெச்சுட்டான்’ என கம்ப்ளெயின்ட் செய்து பள்ளி நிர்வாகம் வரச் சொல்லியிருக்கும். அதை முடிச்சுட்டு வேலைக்கும் போகணும் என்ற அவசரத்தில் பல அப்பாக்கள் ஓடுகிறார்கள்.

ரயிலில் இருந்து இறங்கியதும் பஸ்ஸைப் பிடிக்கவும், பஸ்ஸில் இருந்து இறங்கியதும் ரயிலைப் பிடிக்கவும்தான் இப்படிப் பழக்கூடையைத் தட்டிவிட்டும், பரதேசி என திட்டிவிட்டும் ஓடுகிறார்கள் சென்னை மக்கள்.

‘லேட் ஆனால் ஹோட்டலில் கெட்டிச்சட்னி தீர்ந்துவிடும், பிறகு இட்லிக்குக்கூட வடகறி தான் சைடு டிஷ்’ என்ற பயமும் பலரை ஓடவைக்கிறது.

முதல்நாள் ராத்திரி முழுக்க வாட்ஸ்-அப்பில் சண்டை போட்டு, ஃபேஸ்புக்கில் சோக ஸ்டேட்டஸ் போட்ட காதலர்கள், அவர்களது காதல் பிரேக் அப் ஆகாமல் மீண்டும் பிக் அப் ஆக்கவே ஃபுல் மேக்-அப்பும், தீபாவளி டிரெஸ்ஸுமாய் ஓடுகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்