மாயமில்லே....மந்திரமில்லே!

‘24’ படத்தில் ஒருநாள் டைம் ட்ராவல் செய்யும் கடிகாரத்தைக் கண்டுபிடிப்பார் சூர்யா. அதே மாதிரி, ஒரு கருவி கிடைச்சா, என்னென்ன அட்ராசிட்டி பண்ணலாம்?

மருந்து, மாத்திரைகளை எழுதற டாக்டரின் கையெழுத்துதான் பல பேருக்குத் தலையெழுத்து. மலிங்காவோட பவுலிங்கைவிட அதிக ஸ்பீடுல போகிற மருத்துவர்களின் கையெழுத்தின் ஒவ்வொரு எழுத்தையும் ‘ஃப்ரீஸ்’ ஆக்கிப் பொறுமையாகப் படிக்கலாம். ‘தலைவலி மாத்திரை 4’னு எழுதினதுக்கா இத்தனை பில்டப்னு அவருக்கே புரியாத அவருடைய கையெழுத்தைப் படித்துவிட்டு மெர்சல் ஆக்கலாம்!

அலாரம் அடிச்ச மாதிரி சரியான டைமுக்கு ஆபீஸ் போறது, ‘நடக்கும் ஆனா நடக்காது’ காரியம்தான். பாஸ்கிட்ட திட்டு வாங்கலைனா சரி. வாங்கப்போறோம்னு தெரிஞ்சுட்டாலே, சட்டுனு டைம் ட்ராவல் கிளம்பி, உங்களை நீங்களே சீக்கிரம் உசுப்பிக்கிட்டு ‘துலா ராசி நேயர்களுக்கு, இன்றைய தினம் சிறப்பு’ங்கிற ராசிபலனையும் கேட்டுட்டு, மங்களகரமா ஆரம்பிக்கலாம் அன்றைய தினத்தை!

பரீட்சை அன்னைக்கு பெல் அடிச்சதுமே பேப்பரைப் பிடுங்குற ‘கிரேட்’ ஆசிரியர்கள்கிட்டதான் அடிக்கடி மாட்டுவோம். 33 மார்க் வாங்குற அளவுக்குப் பரீட்சை எழுதிட்டுத் திருதிருனு முழிக்கிற அறிவாளிப் பசங்களுக்கெல்லாம், இது வரம். ஒரு நிமிடத்துல நாலுவரிக் கதைகள் நாலு எழுதிப்போட்டோம்னா, ரெண்டு மார்க் கிடைக்காதா என்ன?

படத்தில் வர்ற கிளுகிளுப்பான முத்தக்காட்சிக்காகவே படம் பார்க்க வந்துட்டு, பக்கத்து சீட்டுக்காரருக்கு பாப்கார்ன் வாங்கப்போனா, அய்யோ பாவம்தான். ஆனா, அதுக்கெல்லாம் அசரத் தேவையில்லை. டைம் ட்ராவல் போறோம். திரும்பத் திரும்பப் பார்க்கிறோம்!

சின்னப்பசங்களோட விளையாண்டா, ஈஸியா ஏமாத்திப்புடலாம்னு கிரிக்கெட் ஆடுவோம். அன்னைக்குனு பார்த்து எல்லோரும் ஃபுல் ஃபார்ம்ல விளையாடி, அடிக்கடி அவுட் ஆக்கி அசிங்கப்படுத்துவாங்க. எத்தனை தடவைடா ஏமாத்துறதுனு உங்களுக்கே குற்றஉணர்வு வந்துடுச்சுனா, மானம் மரியாதை என்னாகிறது? அவுட் ஆகிற பந்துக்கெல்லாம் டைம் ட்ராவல் போனோம்னா, அவுட் ஆகும் பொழுதுகளையெல்லாம் மாற்றி, பொழுதோட விளையாடிக்கிட்டே இருக்கலாம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்