மகிழ்ச்சி!

‘மகிழ்ச்சி’ னு ஒரு வார்த்தையை ரஜினிகாந்த் சொன்னாலும் சொன்னார். ஊரெல்லாம் அதே பேச்சுதான். காலம் போற வேகத்துலேயும் இந்த விஞ்ஞான உலகத்திலேயும் பெரிய பெரிய விஷயங்களுக்குதான் மகிழ்ச்சியா இருக்கணும்னு இல்ல, இதுகூட மகிழ்ச்சிதான் பாஸ்..

காலையில எழுந்திரிச்சு மொபைலைப் பார்க்கும்போது பேட்டரி ஃபுல்லுனும் நெட்வொர்க் கவரேஜ் ஃபுல் பாயின்ட்லேயும் காட்டினா எவ்வளவு பெரிய மகிழ்ச்சி.

படம் பாக்க அர்ஜென்ட்டா ஆன்லைன்ல டிக்கெட் தேடும்போது  டிக்கெட்  கிடைச்சுடுச்சுனா மகிழ்ச்சி. அதுவும் எதிர்பார்த்த கார்னர் ஸீட்லேயே கிடைக்குதுனா அது டபுள் மகிழ்ச்சி.

போடுற ஸ்டேட்டஸுக்கு லைக் போடலைனாலும் பரவாயில்லை. நாம போடுற ஸ்டேட்டஸை அப்படியே ரூட் மாத்தி விடாம இருந்தாலே மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

வெறும் குஸ்கா வாங்குற நமக்கு அதுல சிக்கன் பீஸ் கிடைக்கிறதையெல்லாம் இந்த மகிழ்ச்சி லிஸ்ட்ல சேர்க்கலைனா, சாமி குத்தம் ஆகிடும் பாஸ்.

ரொம்பநாளா ஃபேஸ்புக், வாட்ஸ்-அப்ல ஃப்ரெண்டா இருந்தும்  வீணாப்போன எந்த குரூப்புலேயும் நம்மைக் கோத்துவிடாத ஒரு நட்பு இருந்தா, கண்ணீர் பெருகும் மகிழ்ச்சி.

புருசனா மதிக்கலைனாலும் பரவாயில்லை. ஒரு உயிரினமா மதிச்சு ‘அது’, ‘இது’னு மனைவி சொல்றது தொடர்ந்தாலே மகிழ்ச்சிதான்.

போறபோக்குல ‘அட! என் கல்யாணத்துக்கு நான் கட்டிக்கப் போற பொண்ணே  நேர்ல வந்துருக்கே’, ‘ஏர்போர்ட் கூரை இப்போவெல்லாம் மாசத்துக்கு ஒரு தடவைதான்  உடையுதாமே! மகிழ்ச்சி!’ னு ஃபியூச்சர்ல ஃபீல் பண்ணலாம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்