இது விழிப்பு உணர்வுக் கட்டுரை!

லகத்துலயே ரொம்பக் கடுப்பான விஷயம்னா, ஞாயிற்றுக்கிழமை அதுவுமா அதிகாலை(!) ஒன்பது மணிக்கு எழுந்திரிக்கிறதுதான். அப்படித் தவறுதலா நாம எழுந்திரிச்சதுக்கு அப்புறம் மத்த ரூம் மேட்ஸ் தூங்கறதைப் பார்த்தா இன்னும் கடுப்பு வரும். அப்படிப்பட்ட பொறுமையிழந்த நேரத்தில் மற்ற பேச்சுலர்ஸ் பண்ற அட்ராசிட்டிகள்தான் இவை.

கஷ்டப்பட்டு எல்லோரையும் எழுப்பிவிடுறதுக்குப் பதிலா ஃபேன் ஸ்விட்சை ஆஃப் பண்ணிட்டா, அடுத்த அஞ்சு நிமிஷத்துல எல்லோரும் எழுந்திரிச்சு உட்கார்றது உறுதி. ஆதிகாலத்துலேர்ந்து வன்முறையை விரும்பாத அம்மாக்கள் ஒவ்வொரு வீட்லேயும் காலம் காலமா கடைப்பிடிச்சிட்டு வர்ற டெக்னிக் இது.

நாம வைக்கிற அலாரத்துல பக்கத்துல உள்ளவன் எழுந்திரிக்கிறதுதான் டிசைன். அதனால நம்ம மொபைல்ல அடுத்த ரெண்டு நிமிஷத்துல அலாரம் செட்பண்ணிட்டு குப்புறப்படுத்துக்கலாம். அப்புறம் கூட்டத்தோட கூட்டமா எதுவுமே நடக்காத மாதிரி கண்ணைக் கசக்கிட்டே எழுந்திரிச்சுக்கலாம்.

இதுக்கு முன்னாடி சீக்கிரம் எழுந்திரிச்சு நம்மைக் கடுப்பேத்துனவனைப் பழி தீர்க்க சரியான நேரம் இதுதான். தண்ணியில் முக்கிப் பிழிஞ்ச ஈரத்துண்டை ரூம்ல எந்த மூலையிலேர்ந்து உதறினாலும், அரை நிர்வாணமா கிடக்கிற நம்ம பய மேல குற்றாலச் சாரல் மாதிரி விழுந்து எழுப்பிவிட்டுடும். அந்த கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச?

இடியே விழுந்தாலும் சைடுக்கா திரும்பிப் படுத்து தூக்கத்தை விட்ட இடத்துலேர்ந்து கன்டினியூ பண்ற நம் ஆளுங்க, கேர்ள் ஃப்ரெண்டுக்கு வெச்சுருக்கிற ரொமான்டிக் ரிங்டோன்ல முழிக்கிறது இன்னும் தீர்க்கப்படாத அறிவியல் புதிர். அந்த ரிங்டோன் என்னவோ அதையே பாடவிட்டா, ஆழ்மயக்கத்துல இருந்தாலும் அஞ்சு செகண்ட்ல எழுந்திரிச்சிருவாங்க.

24x7 ஒளிபரப்பாகும் பிரார்த்தனை சேனலைக் கொஞ்சம் சத்தம் அதிகமா வெச்சுவிட்டா, அதை மீறி தூங்குற ஆளே கிடையாது. ஒருவேளை அதனாலதான் அதுக்கு ‘எழுப்புதல்’ பிரார்த்தனைனு பேர் வந்ததோ?

விடிய விடிய உலகப்படங்கள் பார்த்து டயர்ட்ல தூங்குறவனா இருந்தாலும் சரி, ஹெவியா சரக்கடிச்சிட்டு அரைபோதையில் உருள்றவனா இருந்தாலும் சரி, ‘என்னடா மச்சான் திங்கட்கிழமை அதுவுமா இப்படி தூங்கிட்டுருக்க?’னு கேட்டுட்டு ஓடிடணும். இதைவிட ஷாக்கிங் ட்ரீட்மென்ட் ஏதாவது இருக்கா பாஸ்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்