நம்பிக்கை...அதானே வாழ்க்கை!

யானையின் பலம் தும்பிக்கை, மனிதனின் பலம் நம்பிக்கை. ஆனால், நமக்கே நம்ம மேல நம்பிக்கை கிடையாது. ‘பேபிமா பிலீவ் மீ...’னு மத்தவங்க காலைப் பிடிச்சுக் கதறுவதற்கு முன்னாடி இதையும் கொஞ்சம் என்னானு பாருங்க...

நாம நிற்கிற சுற்றுவட்டாரம் திடீர்னு குடலைப் புரட்டுச்சுனா, முதல் வேலையா நம்ம காலைத் திருப்பி நம்ம செருப்பைதான் நோட்டம் விடுவோம். ச்சை...

ஏதோ ஒரு ஆங்கிளில் நாமும் அஜித்குமார் மாதிரித் தெரிந்துவிட, நம்மையும் ஒரு பொண்ணு வெச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும். ஆனால், நாமோ நமக்குப் பின்னால் நிற்கிற மங்குஸ்தான் மண்டையனைத்தான் பார்க்குது என நம்ம சோலியைப் பார்க்க ஆரம்பித்துவிடுவோம். மங்குஸ்தான் மண்டையன் மேல வெச்ச நம்பிக்கையை நம்ம மேல வைப்போம்.

ஸ்கூல் படிக்கிற காலத்திலேயே யாருடைய ஸ்லேட் குச்சியாவது தொலைந்து போயிருந்தால், அதைக் கண்டுபிடிக்க ‘எவன் திருடினானோ, அவன் தலை சுடும்’ என தெனாலிராமன் கதை ஓட்டுவார்கள். நாமே ஸ்லேட் குச்சி இல்லாமல், கீழ கிடந்த துண்டு சாக்பீஸை எடுத்து எழுதிக்கொண்டிருப்போம். ஆனால், ஆர்வக்கோளாறில் தலைமேல் கைவைத்து தொக்காகச் சிக்கிவிடுவோம்.

தம்மாத்தூண்டு பூட்டு என்றாலும் பரவாயில்லை. கிர்ணிப் பழ சைஸில் உள்ள ஒரு பூட்டைப் பூட்டிவிட்டு குறைந்தது ஒன்பது முறை இழுத்துப் பார்ப்போம். இது பூட்டு மேல உள்ள அவநம்பிக்கை இல்லை, நாம சரியா பூட்டி இருக்க மாட்டோம்கிற நம்பிக்கை. நாம் இழுத்ததிலேயே தாழ்ப்பாள் பாதி கழண்டு தொங்கிக் கொண்டிருக்கும். திருட வருபவன் சுண்டிவிட்டாலே தாழ்ப்பாள் தெறித்து விழும்.

வண்டி ஓட்டிப் பழகும்போது ‘கண்டிப்பாக அந்த போஸ்ட்மரத்தில் மோதிவிடுவோம்’ என்ற நம்பிக்கை மட்டும் நம் அடிமனதில் நங்கூரம் மாதிரி நச்சுனு பதிந்திருக்கும். சற்றுமுன்னர், வண்டியை லாரிக்கடியிலேயே படுக்கப்போட்டு வித்தை காட்டிய நாம், போஸ்ட்மரத்தைப் பார்த்ததும் அதில் வண்டியை பப்பரப்பே என செருகியிருப்போம்.

நாம் ஒருதலையாகக் காதலித்து வரும் பெண்ணிடம் லவ் சொல்றதுக்கு மட்டும் நமக்கு தைரியம் கிறதே வராது. நம்ம சட்டை கசங்கியிருக்கு, நெத்தியில் விபூதி அழிஞ் சுடுச்சு, இன்னைக்கு வியாழக்கிழமை, வெயில் சுள்ளுனு அடிக்குது என ஏதேதோ துக்கடா காரணங்களைச் சொல்லி அந்தக் காதலை இழந்திருப்போம். கான்ஃபிடன்ட் இல்லைனா பிக் ப்ராப்ளம் மச்சி...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்