சினிமா விடுகதை!

டிகர் கார்த்தியின் சினிமா டைட்டில்கள்தான் இந்த வார சினிமா விடுகதைகளின் விடைகள் பாஸ்..!

1.    தோள் கொடுப்பான் இவன். லா லாலா விக்ரமன் படத்தின் ஹை-பை வெர்ஷன். என்ன படம் இது?

2.
    டபுள் ஹீரோ படத்தில் ஒருத்தர் பேர்லேயே ராக்கெட் இருக்கும். ஆந்திரா கார சினிமாவில் காட்டுப்பூச்சிக்கும் காமெடி இருக்கு! என்ன படம் பாஸ்?

3.  
   ‘கபாலி’ டைட்டில் படத்தில் ஸ்வீட் ஸ்டால் பொண்ணும் உண்டு. ‘மெடுலா ஆப்லேங்கேட்டா’ ஆளும் உண்டு. கபடி ஆளு இயக்கின படம் ஹிட்டாச்சு அக்கட தேசத்திலும்! என்ன படம் இந்தப் படம்?

4.     மகாபாரத கேரக்டர் சினிமாவில் ரஜினியும் கமலும் ஸ்ரீதேவியும் இருக்காங்க. சுமாரான படத்துல பழைய ஹீரோயின்ஸ் ரெண்டு பேரு இருக்காங்க. என்ன படம்னு சொல்லுங்க மக்களே?

5.     பையனுக்கு கார் கொடுத்தால் கார் ஓட்டுவான். கூட ஒரு பொண்ணு இருந்தா ஊர் சுத்துவான். ஒல்லி பெல்லி பொண்ணு கூடவே இருந்தா, மழைப்பாட்டும் பாடுவான். அவன் யார்?

6.
    ஊருக்கு மட்டும் அல்ல. பலருக்கு அட்ரஸ் தந்த படம். ‘ஒன்ஸ் அப்பான் எ டைம்’ மட்டும் அல்ல. இப்பவும் இப்படித்தான் இருக்குனு சொன்ன படம் இந்தப் படம். அரசியல் படத்தில் ‘அன்பு’ம் இருக்கு ‘கலை’யும் இருக்கு!

7.     நாக்குல எச்சில் ஊற வைக்கிற படம். ‘ஹேங் ஓவர்’ ஜாஸ்தியானதால சாப்பிட முடியாமப் போச்சே! வாரிசு டைரக்டரின் படத்துக்கு வாரிசு ஆள்தான் இசையும்! என்ன படம்?

8.  
   காட்டன் பேரு வெச்ச காட்டான் இவன். கானா பொணமாக்கும் கயவன் இவன். போலீஸையே காதறுத்து மூளியாக்கும் பொறுக்கி இவன். ஆனாலும் அழகிக்கு இவனைத்தானே பிடிக்கும் மக்கா! யார் இவன்?

விடைகள்:

1. தோழா, 2. சிறுத்தை, 3. நான் மகான் அல்ல, 4. சகுனி, 5. பையா, 6. மெட்ராஸ், 7. பிரியாணி, 8. பருத்தி வீரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்