ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

மொபைல் போனையும், மனிதனையும் பிரிக்க முடியாதுனு பல பேர் நிரூபிச்சுக்கிட்டு இருக்காங்க. நிலைமை இப்படி இருக்கும்போது, நாம பயன்படுத்துற மொபைலுக்கு ஏதாவது ஆச்சுனா, வேலைக்கே லீவு போட்டுக்கூட மொபைல் கடையில நிற்கிறோம். ‘நாளுக்கு ஒருதடவை, வாரத்துக்கு ஒருதடவையாவது மொபைலை ஆஃப் பண்ணி, ஆன் பண்ணுங்க சார்’னு ஆயிரத்து சொச்சமாவது தடவை கடைக்காரர் காறித் துப்புறதையும் சிரிச்சு சமாளிக்கிறோம். இப்படி மொபைல்ல வர்ற மொத்தப் பிரச்னைக்கும் மொத்தமா முடிவு கட்டலைனாலும், ஓரளவு குளுக்கோஸ் ஏத்துறதுக்கு ஒரு அப்ளிகேஷன் இருக்கு. அதுதான், ‘கேலரி டாக்டர்!’

உடம்பு சரியில்லைனா, டாக்டரைப் பார்க்கிற மாதிரி மொபைல் போன்ல எல்லாமே நல்லா இருந்தாலும், அப்பப்போ இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்துனீங்கனா, மொபைல் நல்லபடியா இருக்குமாம். எப்படி? ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்துறவன் போன்ல ஒரு செல்ஃபிகூட இல்லைனா, மேலும் கீழும் பார்க்கிற உலகம் இது. அதுக்காகவே என்ன பண்றோம்? ஒரு ‘நல்ல செல்ஃபி’க்காக நூறு க்ளிக் பண்றோம். செல்ஃபி மட்டுமா... வீடு, ஆபீஸ், அவுட்டோர்னு ஆயிரத்தெட்டு இடத்துல ரெண்டாயிரத்தெட்டு படங்களை எடுத்து கெத்து காட்டுறோம். முடிஞ்சதா பிரச்னை? இல்லை. வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், ட்விட்டர்னு எட்டிப்பார்க்கிற எல்லா இடங்களிலும் போட்டோ, ஆடியோ, வீடியோனு கொத்துக் கொத்தா விழற எல்லாத்தையும் டவுன்லோடு பண்ணி வெச்சிருக்கிறோம். இப்படியே போனா, மொபைல் போன் என்னென்னமோ பாடுகளைச் சந்திக்கும். ஆனா, அதையெல்லாம் ஒரு க்ளிக்கில் விரட்டிவிடும் இந்த கேலரி டாக்டர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்