“முதல் உலக சினிமா தமிழ்ப்படம்தான்!”

வாசன் பாலா..! பாலிவுட் சினிமா புது அலை இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் பிரதான சீடர். பாலிவுட்டின் போக்கை மாற்றியமைத்த அனுராக் காஷ்யப்பின் முதல் படம் ‘தேவ் டி’-யில் ஆரம்பித்து தற்போது ரிலீஸாகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ராமன் ராகவ் 2.0’ படம் வரை அனுராக்கின் வலதுகரமாக இருக்கிறார். மும்பையின் நில அமைப்பை வைத்து வந்த ‘பாம்பே வெல்வெட்’, ‘ராமன் ராகவ்2.0’ படங்களின் கதையை எழுதியது இவர்தான். மும்பைத் தமிழர் என்பது கூடுதல் சிறப்பு. வாசன் பாலாவிடம் பேசினேன்...

‘‘உங்கள் சினிமாக்கள் சமூகத்தின் இருண்ட பக்கங்களை மட்டுமே பேசுகின்றதே... ஏன்?”

‘‘நான் அப்படிப்பட்ட உலகை நிஜத்தில் பார்த்ததில்லை. மிடில் கிளாஸ் குடும்பத்தில் மிகப் பாதுகாப்பாக வளர்ந்தவன் நான். அதனாலேயே எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத இன்னொரு உலகைப் பற்றிய தேடல் இருந்தது. அதுபற்றி ஆர்வத்தோடு படிக்கவும், ஆழமாக விவாதிக்கவும் செய்வேன். அந்த உலகம் என்னை வசீகரிக்கும். அதுதான் இப்படி இருண்மை சினிமாக்களுக்கு என்னை அழைத்து வந்திருக்கிறது.”

‘‘உங்கள் குரு அனுராக் காஷ்யப் இந்திய சினிமாவை உலக அளவிற்குக் கொண்டு சென்றவர். அவருடன் முதல் படத்திலிருந்து இன்றுவரை பயணிக்கும் அனுபவம் எப்படிப்பட்டது?”

‘‘அவரிடம் எதைப்பற்றியும் சண்டை போடலாம். விவாதிக்கலாம். அவர் என்னை மட்டுமல்ல. அவரிடம் பணியாற்றும் எல்லோரிடமும் அதே அணுகுமுறையைக் கடைபிடிப்பவர். அவர் என் குரு என்பதைவிட நல்ல நண்பர். அவர் எங்களை வழிநடத்தவோ எங்களுக்கு அட்வைஸ் பண்ணவோ மாட்டார். நடுக்கடலில் தள்ளிவிட்டு நம்மை நீச்சல் பழக வைத்து நமக்கான வழியினைத் தேடிக் கண்டடைய வைக்கும் நல்ல நண்பர். படைப்பாளி என்பதையும் தாண்டி சினிமாவுக்கு மிக நேர்மையான மனிதர்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்