சினிமால்

முப்பது வயதைக் கடந்தாலும் சூப்பர் ஸ்டாரினி இமேஜை அப்படியே தக்கவைத்து வருபவர் நயன்தாரா. அதற்கு முக்கிய காரணம், மூத்த ஹீரோக்களோடு ஜோடி போடுவதைத் தவிர்த்துவிட்டு, தன்னை முன்னிலைப்படுத்தும் படங்களை மட்டும் தேர்வுசெய்து நடிப்பதுதானாம். இளம் கதாநாயகர்கள் என்றால் உடனே ஓகே சொல்லும் நயன், அதில் நாயகனைக் காட்டிலும் தன் கதாபாத்திரமே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று இயக்குநரிடம் கறாராகச் சொல்லி விடுகிறாராம். இந்த கண்டிஷனுக்கு ஓகே என்றால்தான் கால்ஷீட்டே கொடுப்பாராம்.

‘பொல்லாதவன்’ படத்தில் நடித்த தன்னுடைய முக்கியமான அத்தனை நடிகர்களையும் தற்போது இயக்கிவரும் ‘வடசென்னை’ படத்திலும் நடிக்க வைக்கிறார் வெற்றிமாறன். தனுஷ் ஹீரோவாக நடிக்க, டேனியல் பாலாஜி, கிஷோர், பவன், கருணாஸ் ஆகியோரை வில்லன் மற்றும் முக்கியக் கதாபாத்திரங்களுக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறார். ஆண்ட்ரியா நடிக்கும் பாலியல் தொழிலாளி கேரக்டர் படத்தின் முக்கிய மான ஹைலைட்களில் ஒன்றாம். வடசென்னைல!

சிவகார்த்திகேயனுக்கு ஸ்ரீ திவ்யாவுடன் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியது கெமிஸ்ட்ரி. இதனாலேயே தான் நடித்துள்ள பிரமாண்டமான ‘ரெமோ’ படத்தில் ஸ்ரீ திவ்யாவை கெஸ்ட் ரோலில் நடிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார். ஸ்ரீ திவ்யாவும் மறுப்பேதும் சொல்லாமல் நடித்துக் கொடுத்ததோடு சம்பளமும் வாங்கிக் கொள்ளவில்லையாம். படத்தில் சினிமா ஹீரோயினாகவே வருகிறார் ஸ்ரீ திவ்யா என்கிறார்கள். இதுதான்டா நட்பு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்