“உதவி இயக்குநர்களுக்குக் கை கொடுப்பேன்!”

குறும்படங்களை விசிட்டிங் கார்டாகப் பயன்படுத்தி, சினிமாவில் சாதிக்கிறார்கள் இளைஞர்கள். சினிமாவிலேயே பல வருடங்களாக உருண்டு புரண்டுகொண்டிருக்கும் உதவி இயக்குநர்களுக்கு ‘ஆரிமுகம்’ என்ற அமைப்பின் மூலம் கை கொடுக்கவிருக்கிறார், நடிகர் ஆரி.

‘‘ ‘ஆடும் கூத்து’, ‘ரெட்டச்சுழி’, ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’, ‘தரணி’னு நீங்க தேர்ந்தெடுக்கிற படங்கள் ஏதோ ஒருவகையில் கவனிக்க வைக்கிறது. பிளான் பண்ணிப் பண்றதுதானா?”

‘‘அப்படியெல்லாம் இல்லீங்க. கிடைச்ச வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கிறேன்னு சொல்லலாம். முதல் படம் ‘ஆடும் கூத்து’ தியேட்டரில் ரிலீஸ் ஆகலைனாலும், தேசிய விருது வாங்கின படம். நான் நடிச்சு, தியேட்டர்ல ரிலீஸான முதல் படம், பாலச்சந்தர், பாரதிராஜா சார் சேர்ந்து நடிச்ச ‘ரெட்டச்சுழி’. இன்னும் சொன்னா, தமிழ் சினிமாவிலேயே இந்த இரண்டு லெஜன்ட்ஸோட சேர்ந்து நடிச்ச ஒரே நடிகர் நான்தான்னு பெருமையா சொல்லிக்கலாம். அப்புறம், புது முயற்சியா இருக்குதேன்னு ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’ பண்ணேன். நடிக்கிறதுக்கு முன்னாடி மேடை நாடகங்கள்ல இருந்தேன். ‘தரணி’ கதை கூத்துக்கலைஞர்கள் சம்பந்தப்பட்டதா இருந்ததோட, அதில் நடிச்ச குமரவேல் என்னோட நடிப்பு வாத்தியார். நான் பார்த்த மனிதர்களோட கதைங்கிறதால, அதைத் தேர்ந்தெடுத்தேன். எல்லா ரசிகர்கள்கிட்டேயும் நான் ரீச் ஆகணும்னு ‘நெடுஞ்சாலை’க்கு டிக் அடிச்சேன். ‘மாயா’ சூப்பர் ஹாரர். ‘உன்னோடு கா’ காமெடி படம். இப்படி என் படங்கள் விதவிதமா இருக்கணும்னு நினைச்சேன், அது நல்லபடியா நடந்திருக்கு. ஒரே மாதிரி படங்களைப் பார்த்துக்கிட்டு இருந்தாலே போரடிக்கும்போது, நடிச்சுக்கிட்டு இருந்தா நல்லாவா இருக்கும். ஸோ, வித்தியாசமான கதை, நல்ல திரைக்கதை இருந்தா என் கால்ஷீட் ரெடி.’’

‘‘ ‘நடிச்சா ஹீரோதான்’னு அடம் பிடிக்க மாட்டீங்களோ?”

‘‘நல்ல படங்களில் நான் இருந்தா போதும்கிறதுதான் முதல் நோக்கம். ஒரு நடிகரோட கேரியர் நல்லா இருக்கணும்னா, முதல்ல நல்ல படங்கள்ல இருக்கணும்.   அதனால, நல்ல கதையில நாம பொருந்திப்போனா, அதுவே சந்தோஷம்.’’

‘‘நடிகர், நடிகைகளுக்குப் பிரத்யேகமா உடற்பயிற்சி சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருந்தீங்களாமே?”

‘‘இப்பவும் என் படங்களுக்குத் தேவையான ‘பாடி ஸ்கல்ப்டிங் (body sculpting)’ பயிற்சியை நான்தான் பண்ணிக்கிறேன். சின்ன வயசுல ஒல்லியா இருப்பேன். பசங்க எல்லாம் என்னை ஈஸியா அடிச்சுப் போட்டுடுவாங்க. அதுக்காக வெறித்தனமா தம்புல்ஸ் எடுப்பேன். அப்பவே அதில் ஆர்வம் அதிகம் ஆகிடுச்சு. முறையா ஜிம்முக்குப் போய் கத்துக்கிட்டேன். மஞ்சப்பையோட சென்னைக்கு வந்து இறங்கினதும், எனக்குச் சோறு போட்டதே இந்த உடற்பயிற்சிக் கலைதான். சேரன் சாரோட ‘ஆட்டோகிராஃப்’, ‘தவமாய் தவமிருந்து’ படங்களுக்குப் பண்ணேன். ‘கற்றது தமிழ்’ ஜீவா, ‘மிருகம்’ ஆதி, ‘யோகி’ அமீர், ‘ஆயிரத்தில் ஒருவன்’ பார்த்திபன் சார்... இப்படிப் பல படங்களில் கேரக்டர்களோட உடல் எப்படி இருக்கணுமோ, அதுக்குத் தகுந்த மாதிரி உடற்பயிற்சி சொல்லிக்கொடுப்பேன்.’’

‘‘சரி, திடீர்னு என்ன உதவி இயக்குநர்களுக்கு உதவுகிற ‘ஆரிமுகம்’ அமைப்பு?”

‘‘திடீர்னு இல்லை. பல மாதங்கள் யோசனை இது. சென்னைக்கு வரும்போது என்னைத் தூக்கிவிட ஆளில்லை. நானோ, என் குடும்பத்துல இருக்கிறவங்களோ சினிமா பின்னணி கிடையாது. சென்னைக்கு வந்ததுக்கு அப்புறம் வழிகாட்டுதலும் இல்லை. இரண்டு வருடம் சான்ஸ் தேடினேன். அப்புறம்தான், ஒரு வேலைக்கு நாம தகுதியாகவே இல்லாதப்போ, அந்த வேலையில் நாம ஜெயிக்க முடியாதுனு தோணுச்சு. கொஞ்சமும் தாமதிக்காம, மேடை நாடகங்களுக்குப் பயிற்சி எடுத்தேன். அப்புறம்தான் சினிமா ஆடிஷனுக்குப் போனேன். நான் எடுத்த முயற்சிகளைப் பார்த்த பல பேர் எனக்கு உதவி பண்ணியிருக்காங்க. இப்போ நான் ஓரளவுக்கு வளர்ந்துட்டேன். ஆனா, திரும்பிப் பார்க்கும்போது, என்னை மாதிரி பல பேர் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங். அதான், ‘கரம் நீட்டிக் கரம் தூக்குவோம்’னு ஒரு கேப்ஷன் ரெடி பண்ணி, ‘ஆரிமுகம்’னு பெயர் வெச்சுட்டேன். இதுமூலமா, நிறைய இயக்குநர்களைத் தேர்ந்தெடுக்கலாம். டெக்னீஷியன்களையும் அடையாளப்படுத்தலாம்.’’

‘‘குறிப்பிட்டு, சினிமாவில் உதவி இயக்குநர்களா இருக்கிறவங்களை மட்டும் தேர்ந்தெடுத்ததுக்கு என்ன காரணம்?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்