கொண்டாட்டத்துக்குப் பின்னால்...

‘ஒழிவு திவசத்தே களி’ (விடுமுறை நாள் கொண்டாட்டம்).  கடந்த வருடம் திரைப்பட விழாக்களில் அதிக கவனம் ஈர்த்த மலையாள சினிமா. கேரள அரசின் சிறந்த படமாகத் தேர்வான படத்தை சனல்குமார் சசிதரன் என்பவர் இயக்கி இருந்தார். மூன்று சிறந்த குறும்படங்களையும் ‘ஓரால்பொக்கம்’ என்ற சினிமாவையும் தந்த இவரின் இரண்டாவது மாற்று சினிமா இது!

உன்னி என்ற மலையாள சிறுகதை எழுத்தாளரின் சிறுகதைத் தொகுப்பு ஒன்றின் தலைப்பே படத்தின் தலைப்பு. அந்தத் தொகுப்பில் முதன்மையாக இருக்கும் அந்தச் சிறுகதைக்கு அழகான திரைவடிவம் கொடுத்திருக்கிறார் சனல்குமார் சசிதரன். படத்தின் கதை...? கேரளத்தில் பிஸியான தேர்தல் நாளில் ஐந்து நடுத்தர வயது ஆண்கள் ஒன்றுகூடுகிறார்கள். ஓட்டுப் போட்டபின் விடுமுறை என்பதால், சரக்கடிப்பதற்காக வித்தியாசமான இடத்திற்குச் செல்கிறார்கள். அடர்ந்த காட்டுப்பகுதியின் நடுவே இருக்கும்  ஆளரமவற்ற பங்களாவில் சரக்கோற்சவம் அரங்கேறுகிறது. மது உள்ளே செல்லச் செல்ல வெவ்வேறு பொருளாதார மற்றும் சமூகப் படிநிலைகளில் இருக்கும் அவர்களின் உண்மையான நிஜமுகம் எட்டிப்பார்க்கிறது. வெறும் கொண்டாட்டத்துக்காக வந்த அவர்கள் ஐந்து பேருக்குள் நிகழும் மாற்றங்களும் அதனால் ஏற்படும் அதிர வைக்கும் ஒரு சம்பவமுமாய் படம் நம்மை உலுக்கி எடுத்துவிடுகிறது. நிஷ்தர் சேட், பைஜூ நெட்டோ, கிரிஷ் நாயர். பிரதீப் குமார், ரேஜு பிள்ளை, அருண் நாயர், தர் எனப் படத்தில் நடித்திருக்கும் ஆண்கள் அனைவரும் சமூகத்தின் ஒவ்வொரு நிலையைப் பிரதிபலிக்கிறார்கள். ஒரே ஒரு பெண்ணாக காட்டுக்குள் இவர்களுக்கு ‘சைடு டிஷ்’ சமைத்துக் கொடுக்கவந்து, ஆண்களின் பாலியல் தொந்தரவைச் சமாளிக்கும் தைரியமான கீழ்த்தட்டு வர்க்கப்பெண்ணாக அபிஜா சிவகலா என்ற நடிகை பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்