ஆஃப் த ரெக்கார்டு!

மிழில் முன்னணி நாயகியாக உயர்ந்துவிட்ட வாரிசு நடிகையைத் தெலுங்கிலும் முன்னணியாக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார் அவரது அம்மா நடிகை. இதனால் ஹைதராபாத்தில் முகாமிட்டு பட வாய்ப்பு வேட்டை நடத்தி வருகிறாராம்!

பேய் இயக்குநருக்குப் புடவை நடிகையை ரொம்பவே பிடித்துப்போய்விட்டதாம். இதனால் வரிசையாகத் தன் படங்களில் வாய்ப்பு கொடுத்ததோடு, தான் இயக்கும் மெகா படத்திலும் முக்கிய ரோலில் நடிக்க வைக்கிறாராம்!

ஒற்றை எழுத்து படத்தில் அறிமுகமாகிப் படம் சூப்பர் ஹிட்டாகியும் அலை வாரிசு நடிகையின் கேரியர் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. இதனால் இந்தியில் உருவாகும் டி.வி சீரியல்களில் நடிக்கும் முடிவில் இருக்கிறாராம்!

முன்பெல்லாம் நம்பர் நடிகை பார்ட்டி கொடுக்கிறார் என்று சொன்னாலே முதல் ஆளாகப் போய் நிற்பார்கள் பலர். ஆனால் தற்போது அவரது மார்க்கெட் சரிந்த பிறகு அவரை விட்டு நிறையப் பேர் விலகி விட்டார்களாம். இதனால் தன்னை மதிக்கும் புதிய நண்பர் குழுவை உருவாக்கி வருகிறாராம் நடிகை!

வேற மாதிரி படத்தில் குடும்பப் பாங்காக அறிமுகமான நடிகை  வர்மாவின் படத்தில் படுகவர்ச்சியாக நடித்தும் வேலைக்காகாததால், தன் சொந்த ஊரான டெல்லிக்குப் போய் விளம்பரங்களிலும், நாடகங்களிலும் நடித்து வருகிறாராம்!

இசை நடிகரிடம் தொடர்ச்சியாக இசையமைத்துவந்த இயக்குனர்கள், சமீபகாலமாக அவரிடம் இருந்து விலகி வேறு இசையமைப்பாளர்களை நாடத் தொடங்கி இருக்கிறார்களாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்