பத்திக்கிச்சுடா!

‘கபாலி’ காய்ச்சலில் தமிழ்நாடே ‘நெருப்புடா’ என புகைந்துகொண்டிருக்கிறது. பிள்ளை பிறந்ததற்கும், சம்பளம் வாங்கியதற்கும்கூட ‘நெருப்புடா’ என பன்ச் அடித்து அலறவிடுகிறது ட்ரெண்டிங் தமிழ்ச் சமூகம். இன்னும் எது எதுக்கெல்லாம் கொள்ளிக்கட்டையை நீட்டுறாய்ங்கனு பாருங்களேன்...

தோசைக்கு மாவு ஊற்றிக்கொண்டிருக்கும்போது தோசைக்கல்லைத் தெரியாத்தனமாகத் தொட்டுவிட்டுவிட்டால் முன்பெல்லாம் வலிக்குதுன்னு கதறுவோம். இப்போ ‘நெருப்புடா’

பக்கத்தில் நிற்பவர் காலைத் தெரியாமல் மிதித்துவிட்டால் கோபப்படாமல் அவர் ‘ஸாரி’ சொல்வதற்கு முன்பே பரவாயில்லை என்போம். இப்போ அவரே பதறிப்போகும் அளவுக்கு அடிவயிற்றிலிருந்து ‘நெருப்புடா’ தான்.

வானத்தைப் பார்த்தபடி ஃபேஸ்புக்கில் போட்டோ போட்டு என்னென்னமோ கேப்ஷன் போட்டவர்களெல்லாம் ஒரேயடியாக யூ-டர்ன் அடித்து ‘நெருப்புடா’ என வெல்டிங் மெஷினைப் பற்றவைக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்