ஓ மை ஃப்ரெண்ட்!

ம்ம ஆயிரம்பேர்கூட பழகினாலும், நமக்கு நெருக்கமான நண்பர்கள்னு ஓரிரண்டு பேர்தான் இருப்பாங்க. அவங்களும், அவங்களுக்கும் நமக்கும் இடையே உள்ள நட்பும் எப்படி இருக்கும்னு சொல்றேன். கேட்டு க்ராஸ் செக் பண்ணிக்கோங்க ஃப்ரெண்ட்ஸ்...

‘அவன் பழக்கவழக்கத்தை நிறுத்துற வரைக்கும் நீ உருப்பட மாட்ட’ என உங்கள் அம்மாவோ, மனைவியோ கையில் சப்பாத்திக்கட்டையை வைத்துக்கொண்டு உங்கள் ஜிகிடி தோஸ்த்தின் பெயரைச் சொல்லித்தான் உங்களை சத்தம் போடுவார்கள்.

நீங்க காமெடினு பேப்பர்ல எழுதிக் கொடுத்தாலே அல்லையில் பிடிச்சுக்கிற அளவுக்கு விழுந்து விழுந்து சிரிச்சு ‘கொலை கேஸ்ல உள்ள போயிடுவோமோ?’ என, உங்களை நினைக்க வைத்து கிலி கிளப்புவார்கள்.

உங்களுக்கு போர் அடிக்கும்போதெல்லாம், அவரைத்தான் குனிய வெச்சு முதுகுல கும்மு கும்முனு கும்மணும்னு தோனும். அவங்க தோளைப் பிடிச்சு இழுத்து, சங்கைக் கடிக்கிறது நமக்கு சந்தோஷத்தைத் தரும்.

நீங்கள் ஆஸ்பத்திரியில் முடியாமல் கிடக்கும்போது உங்களுக்கு ஒரே ஒரு எலுமிச்சைப்பழத்தை வாங்கிக் கொடுத்துவிட்டு, நீங்கள் வாங்கி வைத்திருக்கும் நாலைந்து சாத்துக்குடிகளை ஜூஸ் போட்டுக் குடித்துவிட்டு ‘வரேன்டா’ எனக் கிளம்புவார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்