கடைசியில் ஆரம்பிப்பாங்க!

ல்லூரியின் சில ஃபைனல் இயர் அட்ராசிட்டிகளைப் பார்ப்போமா...

காலேஜுக்கு முதல் இரண்டு வருடங்கள் சினிமாவில் வர்ற இரண்டாவது தம்பி மாதிரி ஒழுங்காப் போனோமா வந்தோமான்னு இருந்தவிங்க கடைசி வருசத்துல ‘நான் வளர்கிறேனே மம்மி...’ என எக்குத்தப்பாக ஆட்டம்போட்டு க்ரைம் லிஸ்ட்டில் டாப்பில் வருவார்கள்.

அதுவரை காலேஜுக்கு முதல் ஆளாகப் போய்க் கதவு திறந்த படிப்பாளிகள் பூராம், கொடுக்கு முளைத்த கொடுக்காப்புளிகளாய் மாறி இரண்டாவது பீரியட் முடியும் நேரத்தில்தான் ‘மே ஐ கமிங் மேம்’ என்பார்கள்.

க்ளாஸ் டெஸ்ட்டுக்கு கட் அடிக்கப் பயந்து பெரியப்பா மகன் கல்யாணத்துக்கே போகாமல் இருந்தவர்கள், செமஸ்டர் எக்ஸாம் அன்னிக்கு விழுந்தடித்து சினிமாவுக்கு டிக்கெட் போடுவார்கள்.

கல்லூரியில் படிக்கும்போதும் காதலிக்கலைனா ஏதோ தெய்வக்குத்தம்னு நினைப்பாங்களோ என்னவோ? ஆளாளுக்கு ஆளுக்கொரு ஆள்கூட கமிட்டாகி கேன்டீன் டேபிளில் எதிரெதிரே உட்கார்ந்து கோக் குடித்து ஆங்காங்கே இருக்கும் சிங்கிள் பாய்ஸ் காதில் புகையைக் கிளப்பிக்கொண்டிருப்பார்கள்.

கண்ணைக்கூட சிமிட்டாமல் கம்ப்யூட்டர் கோடிங் படித்துக்கொண்டிருந்த பெண்களும் கடைசி வருசம் வந்துவிட்டால் கட் அடித்துவிட்டு கூட்டம் கூட்டமாக கேரளாவுக்கோ, ஊட்டிக்கோ அவுட்டிங் போவார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்