கரைத்துக் குடித்துவிட்டீர் ஐயா!

ட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தோற்றதற்குத் தனது ராஜதந்திரம்தான் காரணம் என டெரர் வில்லன் போல டயலாக் பேசிக் கொடூரமாகச் சிரித்த வைகோ இன்னும் கைவசம் என்னென்ன ராஜதந்திரங்கள் எல்லாம் வைத்திருக்கிறார்? என வாக்கிங் போகும்போது யோசித்ததில்...

அரையிருட்டு அறைக்குள் நடந்துகொண்டே மிஷ்கின் படக் காட்சி போலக் காலைப் பார்த்துக்கொண்டு அடுத்த தேர்தலில் எந்தத் திட்டத்தை எக்ஸிகியூட் செய்யலாம் என வெறித்தனமாக யோசிப்பார்.

நம்பியாரைப் போல் உள்ளங்கையைத் தேய்த்துக்கொண்டே முகத்தில் ஏழெட்டு தண்டால் எடுத்துவிட்டு, நாலு பேரைக் குனியச் சொல்லி சைகை காட்டி கர்ண கொடூரமாக முறைத்தபடி யோசித்துத் திட்டம் தீட்டுவார்.

அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் வேறு எந்தக் கட்சியை இழுத்துத் தெருவில் விடலாம் எனத் தமிழ்நாடு முழுக்க நடைப்பயணம் செய்துகொண்டே தீவிரமாக யோசிப்பார். யாரும் சிக்கவில்லையெனில் கனத்த மனதோடும் கலங்கிய கண்களோடும் தேர்தலைப் புறக்கணிக்கும் சோகமான முடிவை எடுப்பார்.

ஏதென்சுக்கும், கிரேக்கத்திற்கும் பயணம் செய்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அங்கே நடந்த அண்டர் கவர் ஆபரேஷன்களை ஆராய்ந்து அதிலிருந்து நோட்ஸ் எடுத்துத் தன் திட்டங்களுக்கு பாயின்ட்ஸ் பிடிப்பார்.

கூட்டணிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கட்சித் தலைவர்களைப் பிரசாரம் செய்யவிடாமல், வாக்கிங் போகலாம், வாலிபால் விளையாடலாம் எனக் கூட்டிப்போய் நாள் முழுதும் ரெஸ்ட் எடுக்கவிடாமல் க்ரெளவுண்டைச் சுற்றி ஓடவிட்டு டயர்ட் ஆக்குவார்.

தன்னோடு புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு 100 ரூபாய் கட்டணம் அறிவித்துவிட்டு, மற்ற கூட்டணிக்கட்சிகளையும் அதுபோலவே பின்பற்றச் சொல்வார். காசுக்குப் பயந்து, ஏற்கெனவே இருப்பவர்களும் எஸ்ஸாகிப் போவதைப் பார்த்து ‘சேம் பின்ச்’ சொல்லிச் சிரிப்பார்.

ஒரு கூட்டணியில் இருந்துகொண்டு பேசிக்கொண்டிருக்கும் மேடையிலேயே கூட்டணியில் இருக்கும் இன்னொரு கட்சியைக் கலாய்க்கும் திறமையும், தைரியமும், தன்னம்பிக்கையும் இந்தியாவிலேயே அண்ணன் வைகோ அவர்கள் ஒருவருக்குத்தான் இருக்கிறது என்று கூறிக்கொண்டு...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்