கதை விடுறாங்க!

‘ஒரு முக்கிய வேலையாக வெளியூர் செல்வதற்காக பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த ராமராஜன், அங்கே இருக்கும் எடை பார்க்கும் மெஷினைப் பார்த்தான்...’

- இந்த வரியை நம் ஃபேஸ்புக் பக்கத்தில் கொடுத்து சுவாரஸ்யமான கதையாக உருவாக்கச் சொல்லியிருந்தோம். வாசகர்கள் உருவாக்கிய கதைகள் இதோ...!

வால்டர்: அவன் அதில் ஏறி நின்று, இரண்டு ஒரு ரூபாய் நாணயங்களைப் போட்டதும் வந்து விழுந்த அட்டையில், ‘இந்த மெஷின் ஒரு வருடமாக பழுதாக உள்ளது’ என எழுதியிருந்தது.

சிவ ஆனந்தன்: அதன் முன்பு நின்று ‘பேச்சி பேச்சி நீ பிரியமுள்ள பேச்சி’ என்று பாடினான். அவனுக்கு நிறைய ஒரு ரூபாய் நாணயங்கள் கிடைத்தன.

விக்கி:  அந்த எடை மெஷினில் வந்த வாசகத்தைப் படித்தவுடன் மகிழ்ச்சியில் துள்ள ஆரம்பித்தான். காரணம், ‘உனக்கு சொந்தமானது என்று எதை நினைக்கிறாயோ அதை நீயே எடுத்துக்கொள்’ என்ற வாசகம்தான் அது. பிறகென்ன, எடை மெஷினை தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டான் ராமராஜன்.

வினோத்: அது அம்மாவால் நிறுவப்பட்ட ‘அம்மா எடை பார்க்கும் இயந்திரம்’. அதில் அம்மா புகைப்படம் இருந்ததைப் பார்த்து மெஷினை வணங்கிக் கீழே விழுந்து கும்பிட்டான் ராமராஜன்.

சரத்: எடை பார்க்கும் மெஷினின் எடை எவ்வளவாக இருக்கும் என்ற தனது நீண்டநாள் சந்தேகத்தை தீர்த்துக்கொள்வதற்காக அந்த மெஷினைத் தூக்கி பக்கத்துக் காய்கறிக்கடை தராசில் வைத்தான் ராமராஜன்.

தங்கவேல்: அதில் ஏறி நின்று ஒரு ரூபாய் காயினைப் போட்டதும் சிவப்பு கலர் டவுசர் ஒன்று வெளியே வந்தது. அதை ஆனந்தத்தோடு அணிந்துகொண்டான்.

நௌஷத்: அதில் தன் எடை பார்க்க விரும்பினான். உடனே மெஷினில் ஒரு ரூபாய் காயினைப் போட்டான். போட்டதும் உங்கள் எடை சரிபார்க்கப்பட்டது என்று வந்தது. அவ்வ்வ்...

சுரேஷ்: அதன் பக்கத்தில் நின்று ‘ஆடு குட்டி போடும். மெஷின் குட்டி போடுமா?’ எனக் கேட்டான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்