சினிமா விடுகதை!

‘சீயான்’ விக்ரமின் சினிமாக்கள்தான் இந்த வார சினிமா விடுகதைகளின் விடைகள் பாஸ்..!

1.
சீயானுக்கு முன்னே வந்த சினிமா. இசைப்புயல் இருந்தும் ஹிட் ஆகாத சினிமா. யூத் பவர் சொன்ன ‘புதிய’ சினிமாவில் நிறைய ‘லலாலலா’ இருந்ததம்மா! என்ன படம் இந்தப் படம்?

2. கூட்டம் கூடின தியேட்டர் வாசல்ல தொங்குமே..! சின்ன ரோலில் வந்தாலும் படத்துக்கு அப்பவே நேஷனல் அவார்டு மிஞ்சுமே! பவர்ஃபுல் படத்துக்கு டைட்டில் சொல்லுங்கப்பு!

3.
ரெண்டெழுத்து சினிமாவில் ரெண்டெழுத்து ஹீரோயின். காக்க காக்க கனகவேல் காக்கனு சொல்லி வெயிட் லிஃப்டிங் பண்ணின ஹீரோவுக்கு மஸ்து ஜாஸ்தி ஃப்ரெண்ட்ஸ்! என்ன படம் பாஸ்?

4. ‘ஓ’ என்றால் ஞாபகத்தில் வரும் மூன்றெழுத்து சினிமா கம்பெனியின் மூன்றெழுத்துப் படம்! அதிரிபுதிரி ஹிட் அடிச்ச படத்தில் ‘நாட்டுக் கட்ட’யும் கர்லாக்கட்டையும் உண்டு!  

5. நந்தவனத்தில் ஒரு ஆண்டி. அவங்கூடவே இருப்பான் சீட்டிங் பாண்டி! சித்தம் கலங்க வைக்கும் கேரக்டரில் பேசாமல் பேச வெச்சாரே நம்ம ஆளு! என்ன படம் இந்தப் படம்?

6. சுட்ட படத்துக்கு குளிர் பிரதேச லொக்கேஷன். குட்டிப்பொண்ணு வந்தாச்சு...குல்பி ஹீரோயினும் வந்தாச்சு... நல்ல டி.வி.டி. கிடைச்சாச்சுனு எடுத்த படம் இந்தப் படம். அதனாலேயே ஹிட் லிஸ்ட்ல படம் வந்தாச்சு. என்ன படம் பாஸ்?

7. நம்ம எல்லோருக்குள்ளேயும் இன்னொருத்தன் இருப்பான். பறந்து பறந்தும் அடிப்பான். சிவகார்த்திகேயன் சினிமா ரோலில் பல அப்பள இதயங்களையும் உடைப்பான்! அவன் யார்?

8.
வீரய்யா இந்தியில மட்டும் வேற ஆளய்யா. அசோகவனத்துல காதல் வளர்க்க நினைச்ச ஆளுக்கு எண்ட் கார்டு கடைசியில உண்டு. ஒரே நேரத்தில் மூன்று மொழியில் வந்த சினிமானு சொன்னா சொல்வீங்கதானே இவனை!

விடைகள்:

1. புதிய மன்னர்கள்

2. ஹவுஸ்ஃபுல்

3. தில்

4. ஜெமினி

5. பிதாமகன்

6. தெய்வத்திருமகள்

7. அந்நியன்

8. ராவணன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்