மர(ண)ம்!

ம் ஊரில் டீக்கடை முதல் கட்டப்பஞ்சாயத்து வரை மரத்தடியில்தான் நடக்கும். ஆனால், வட அமெரிக்காவின் தென்பகுதியிலும், தென் அமெரிக்காவின் வடபகுதிகளிலும் காணப்படும் ஒரு வித்தியாசமான மரத்தின் அருகில் செல்பவர்களுக்கு திடீர் திடீர்னு ரத்தம் வருதாம், மூச்சு அடைக்குதாம், கண்ணு தெரியாமப் போகுதாம், அசந்தா இந்த மரம் ஆளையே கொல்லுமாம். யய்யாடி..!

‘மான்ச்சினீல்’  எனப் பொதுவாக அழைக்கப்படும் இந்த மரம் ‘மரணத்தின் ஆப்பிள்’ எனக் குறிப்பிடப்படுகிறது. ‘மான்சனிலா டீ லா ம்யூர்ட்’ எனும் இந்த மரத்தின் இலைகள் ஆப்பிள் மரத்தின் இலைகளைப் போலவே இருக்கும். பழங்கள் சிறிய ஆப்பிள் பழங்களைப் போலவே இருக்கும். சுவையும் ஆப்பிள் போலவேதான் இருக்கும். ஆனால், இதைச் சாப்பிட்டால் என்ன நிகழும் என்பதைப் பார்க்கத்தான் நாம் இருக்க மாட்டோம். அடக் கொலைகாரப் பயலுகளா..!

இந்த மரத்தின் இலைகளில் இருந்து வெளிவரும் பால் போன்ற திரவம் நம் உடலில் பட்டால், அலர்ஜி ஏற்பட்டு சிறிது நேரத்தில் காது, மூக்கில் இருந்து ரத்தம் வடியத் தொடங்கும். அதிகப்படியான ரத்தம் வெளியேறி மரணமும் நிகழக்கூடும். மழை பெய்யும்போது மரத்தின் அருகில் நிற்பவர்களின் மீது இலையில் பட்ட நீர் விழுந்தாலே தோல் பாதிப்பு உண்டாகிப் புண்ணாகிறது. அந்த மரத்தின் கட்டைகளை எரித்தால், அதிலிருந்து வெளிவரும் புகை மூச்சுக்குழாயைப் பாதித்து உயிரிழப்புக்கு வித்திடுகிறது. அதன் அருகே நிற்பவர்களுக்கு கண்பார்வைக் குறைபாடு ஏற்படுவது நிச்சயம் என்கிறார்கள் இப்பகுதியில் உள்ளவர்கள்.

குழந்தைகளை இந்த மரங்கள் இருக்கும் கடற்கரைகளில் யாரும் விளையாட அனுமதிப்பது இல்லையாம். இந்த மரத்தில் உருவாகும் பால் போன்ற பொருளில்தான் விஷத்தன்மை இருக்கிறது எனச் சிலரும், ‘கடவுளின் சாபம் பெற்ற மரம்’ எனவும் கருதுகிறார்கள். உலகின் மிக அபாயகரமான இந்த மரத்தைப் பற்றித் தீவிரமான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

வெசம்... வெசம்... உடம்பு பூராம் அம்புட்டும் வெசம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்