தோசைக்கார நண்பா!

திண்டுக்கலுக்குப் பிரியாணி, மதுரைக்குப் பரோட்டா, சென்னைக்கு சிக்கன் ரைஸ்... இப்படி ஊருக்கு ஒரு சாப்பாடு ஃபேமஸா இருக்கும். அமெரிக்காவின் நியூயார்க் நகரில், திருக்குமார் கந்தசாமி என்பவரது தோசைக்கடைதான் ஃபேமஸோ, ஃபேமஸ்!

வண்டிச்சத்தம் கேட்டதுமே, குல்பி ஐஸுக்கு அடம்பிடிக்கும் குழந்தைகள் மாதிரி இந்த தோசைக்கடை திறந்ததுமே கியூவில் நின்று ஆர்டர் கொடுக்கிறார்கள் வாடிக்கையாளர். வாஷிங்டன் ஸ்கொயர் பார்க்கில் இருக்கும் திருக்குமாரின் தோசைக் கடைக்கு கல்லூரி மாணவர் களில் இருந்து அமெரிக்க அரசியல் பிரபலங்கள் வரை வாடிக்கையாளர் கள். யாருய்யா இவரு?

இலங்கைத் தமிழரான திருக்குமார் கந்தசாமிக்கு ஆறு சகோதரர்கள், ஒரு சகோதரி. சொந்த பந்தங்களுக்குச் சோறு ஆக்கிப்போட்டே சமையலைக் கற்றுக்கொண்டவர், கொழும்பு அருகே டிராவல் ஏஜென்ஸியும் நடத்தி யிருக்கிறார். காதலித்த பெண்ணை 18 வயதிலேயே கரம்பிடித்தவர், அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அண்ணன், தங்கைகள் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா என வெவ்வேறு ஊருக்குக் குடியேறிவிட்டார்கள். சிறுவயதிலேயே பாட்டி சுடும் தோசைமீது பாசம் அதிகமாம். அதுக்கு? ‘தோசையை உலகம் விரும்பும் உணவாக மாற்றாமல் ஓய மாட்டேன்’ என்று 2001-ல் களமிறங்கியவர்தான், இதோ, 15 வருடங்களாக அசராமல் தோசை சுட்டுக்கொண்டிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்