சினிமால்

டிகர் சங்கக் கட்டடம் கட்டிவிட்டுதான் கல்யாணம் கட்டுவேன் என்பதில் பிடிவாதமாக இருக்கும் விஷால், கல்யாண அவசரமோ என்னவோ கட்டடம் கட்டும் வேலைகளில் மும்முரமாக இறங்கிவிட்டார். கட்டடம் கட்டத் தேவையான பணத்தைத் திரட்ட விஷாலும், கார்த்தியும் இணைந்து நடிக்க, ‘கொம்பன்’ முத்தையா இயக்கும் படத்தை கூடிய விரைவில் துவங்க இருக்கிறார்களாம். தங்கள் சம்பளத்தை அப்படியே நிதியாக கொடுக்கும் அவர்கள், 25 கோடி வரை இந்தப் படம் சம்பாதித்துக் கொடுக்கும் எனவும் நம்புகிறார்கள். இன்னொரு மதுரப்படம்!

அனுஷ்கா ஷர்மா தான் சம்பாதித்த பணத்தில் கொஞ்சமாக சினிமா தயாரிப்பிலும் முதலீடு செய்கிறார். ஏற்கெனவே ‘என்.ஹெச்.10' படத்தை தயாரித்த அனுஷ்கா, அடுத்து ‘கனிடா’ என்ற பெயரில் ஒரு படத்தை தயாரிக்கிறார்.  ‘என்.ஹெச்.10' படத்தை இயக்கிய நவ்தீப் சிங் தான் இந்தப் படத்தையும் இயக்குகிறாராம். இளம் ஹீரோ அர்ஜூன் கபூரை நடிக்க வைக்கவும் முயற்சி செய்து வருகிறாராம். அனுஷ்காவும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறாராம். சிக்ஸர் அடிங்க!

‘இறுதிச்சுற்று’ படத்தின் வெற்றி, மாதவனை மறுபடியும் தமிழ் சினிமாவில் நடிக்கத் தூண்டியிருக்கிறது. நிறையக் கதைகளைக் கேட்டவர், சற்குணம் சொன்ன ஒரு கதை பிடித்துப்போக உடனே கால்ஷீட் கொடுத்து விட்டார். இந்தப் படத்துக்காக சீனத் தற்காப்புக் கலையைக் கற்றுக்கொள்ள மாதவன் அமெரிக்கா பறந்திருக்கிறார். என்றென்றும் புன்னகை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்