உயர்ந்த மனிதன்!

`அப்பா' படத்தில்,  ‘‘உயர்ந்துட்டே நண்பா...'' எனச் சொல்லவைத்த ‘உயர்ந்த' நடிகர் நஸாத் அகமதுவைத் தொடர்புகொண்டால்  கொஞ்சம் கூச்சத்துடனே பேசுகிறார்.

‘‘உங்களைப் பற்றிச் சொல்லுங்க?''

‘‘ஈரோடு பக்கத்துலே ஒரு கிராமத்தில் பொறந்தேன். அப்பா கார் டிரைவர். பத்தாவது படிக்கிற ஒரு தங்கச்சி. நான் இப்போ அங்கே இருக்குற ஸ்கூல்ல 11-ம் வகுப்பு படிக்கிறேன்.''

‘‘இதுதான் உங்களுக்கு முதல் படமா?''

‘‘இது ரெண்டாவது படம். இதுக்கு முன்னாடி ‘கொளஞ்சி'ங்கிற படத்துலே நடிச்சேன். அந்தப் படம் மூலமாகத்தான் ‘அப்பா' பட வாய்ப்புக் கிடைச்சது.''

‘‘படிச்சுட்டே நடிக்கிறது கஷ்டமா இல்லையா?''

‘‘அது ஒண்ணும் பிரச்னையா தெரியலை. ஷூட்டிங் முடிச்சதும் ஊருக்குப் போய்டுவேன். முதல் படம் பண்ணும்போது நடிக்கிறதுல சிரமங்கள் இருந்துச்சு. இப்போ அதெல்லாம் பழகிருச்சு.''

‘‘உயரத்தை வெச்சு உங்களைக் கிண்டல் பண்ணுவாங்களா?''

‘‘அந்த மாதிரி இதுவரைக்கும் நடந்தது இல்லை. ஸ்கூல்லேயும் சரி, வெளியிலேயும் சரி... எல்லாரும் பாசமாப் பழகுவாங்க.''

‘‘படத்துல உங்களை மக்குனு சொல்லி பள்ளிக்கூடத்தை விட்டு அனுப்பிடுவாங்க. நிஜத்துல  எப்படி?''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்