ஆஃப் த ரெக்கார்டு!

சேட்டன் ஹீரோவுக்கு  நல்ல நேரம் செட்டானதால் மலையாளத்தில் இப்போ டாப் ஹீரோ. அதே நேரத்தில் தமிழிலும் நான்கு பெரிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம். இதனால் தமிழின் இளம் ஹீரோக்கள் சற்றே கவலையில் ஆழ்ந்திருக்கிறார்களாம்!

தன் மேனேஜர் தயாரித்த படத்தில் நடித்த நம்பர் நடிகை படத்தின் புரமோஷனுக்கு வர மறுக்கிறாராம். தன் சமூக வலைதள பக்கத்தில் அந்தப் படத்தைப் பற்றிய செய்திகளைப் பகிர்வதைத் தவிர்க்கிறாராம். பேசிய சம்பளத்தைத் தராததால்தான் இந்த ட்ரீட்மென்டாம்!

கோட் நடிகர் போல எந்த விழாவிலும் பங்கேற்க மாட்டேன் என கொள்கை வைத்திருந்த வெற்றி நடிகர், தற்போது தயாரிப்பாளர்களிடம் மிகவும் பணிவாக நடந்துகொள்கிறாராம். படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் ஆஜராவதோடு, தேவைப்பட்டால் புரமோஷனில் கலந்துக்கிறேன் எனவும் கூறுகிறாராம்.

கணவர் இயக்குநர் பிரமாண்ட பட்ஜெட்டில் இயக்கும் சரித்திரப் படத்தில் நடிக்க தெலுங்கின் பிரின்ஸ் நடிகரை அணுக, மறுத்து விட்டாராம் நடிகர். தமிழின் டாப் ஹீரோ ஒருவருடன் இணைந்து நடிக்கப் போறீங்க எனச் சொன்னதால், எங்கே தன் கேரக்டரை டம்மி ஆக்கிவிடுவார்களோ என யோசித்து மறுத்துவிட்டாராம்!

அடுத்தடுத்து பச்சை நிறுவனம் தயாரித்த படங்கள் தோல்வியைத் தழுவியதால் தற்போது தயாரித்து வரும் 3 ஆம் பாகம் (சிங்கம் 3) படத்தின் பட்ஜெட்டைக் குறைக்கச் சொல்லி இயக்குநருக்கு கண்டிஷன் போட, இயக்குனரோ பிடி கொடுக்காமல் திட்டமிட்டபடிதான் என்னால் எடுக்க முடியும் எனக் கூறிவிட்டாராம்!

கடைத்தெரு நடிகை சமீபத்தில் நடித்த ஒரு விளம்பரப் படத்தில் மிகவும் குண்டாகத் தெரிகிறாராம். இதனைப் பார்த்த சில தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் நடிகையை ஒப்பந்தம் செய்யாமல் போக, ஷாக்கான நடிகை தன்னுடைய சமீபத்திய போட்டோக்களை எல்லோருக்கும் அனுப்பி வருகிறாராம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்