கதை விடுறாங்க!

‘கஷ்டப்பட்டு ‘கபாலி’ படத்துக்கான டிக்கெட் வாங்கி திரையரங்கத்துக்குள் நுழைந்த அருணாச்சலம்...’

- இந்த வரியை நம் ஃபேஸ்புக் பக்கத்தில் கொடுத்து சுவாரஸ்யமான கதையாக உருவாக்கச் சொல்லியிருந்தோம். வாசகர்கள் உருவாக்கிய கதைகள் இதோ...!

சண்முக சுந்தரம்: எதிரே கல்பனா அக்கா ‘முடியுமா பயமா... ஹாஹாஹா...’ என சிரித்தபடி நடந்துவர, கஷ்டப்பட்டு உள்ளே வந்தால், இது பெருங்கஷ்டமா இருக்கே என நினைத்து ஓடிப்போய் தன் இடம் பார்த்து அமர்ந்தான்.

ப்ரீத்தி: சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டு போட்டவுடன், அப்படியே செல்ஃபி எடுத்து முகநூலில் தலைவர்டா... நெருப்புடா... என ஸ்டேட்டஸ் போட்டான்.

கார்த்திக்: ஹீரோ பொன்னம்பலம் என்ட்ரிக்கு கைதட்டி விசில் அடிச்சுக் குதூகலமானான். இது பொன்னம்பலம் ஹீரோவா நடிச்ச ‘கபாலி’. எப்படி நம்ம ட்விஸ்ட்?

சக்தி: தனது பாட்டியின் ஆவி திரையரங்கைச் சுற்றி வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தான். ‘பாட்டி செத்துட்டாங்க. லீவு வேணும் சார்’ என அவன் பொய் சொல்லி திரையரங்கத்திற்கு வந்ததை நினைத்துப் பார்த்தான்.

ஜான்: ‘நெருப்புடா’ என ரசிகர்கள் கத்தியதைக் கேட்டு தீ பிடித்துவிட்டதோ என அலறி அடித்துக்கொண்டு தியேட்டரை விட்டு ஓடினான்.

மோகன்: ‘கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாம கிடைக்கிறது என்னைக்கும் நிலைக்காது’ என பன்ச் பேசினான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்